\
rr vs mi
rr vs micricinfo

205 ரன்கள் குவித்த RR.. 0 ரன்னுக்கு ரோகித் அவுட்.. Playoff நோக்கி ராஜஸ்தான்!

மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 205 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
Published on
Summary

2026 ஐபிஎல் தொடரில் பிளேஆஃப் இடத்துக்கான கடும் போட்டியில், மும்பையை எதிர்த்து ராஜஸ்தான் அணி கிட்டத்தட்ட நாக் அவுட் சூழலில் களமிறங்கியது. தொடக்கத்தில் 7 ஓவரில் 60/3 என தடுமாறிய நிலையில், துருவ் ஜூரல், தசுன் ஷனகா, ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவரில் 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் இலக்காக வைத்த ராஜஸ்தானை எதிர்கொண்ட மும்பை, 24 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் சிக்கியது.

2026 ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் முதலிய 3 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், கடைசி 1 இடத்திற்கு பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் முதலிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவிவருகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்எக்ஸ் தளம்

பஞ்சாப் அணி 15 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்திருக்கும் நிலையில், 14 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி வெல்லவேண்டிய முக்கியமான போட்டியில் மும்பையை எதிர்த்து விளையாடுகிறது. கிட்டத்தட்ட ஒரு நாக் அவுட் போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடுகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவரும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தாலும் விரைவாகவே அவுட்டாகி வெளியேறினர். அடுத்துவந்த கேப்டன் ரியான் பராக்கும் அவுட்டாகி வெளியேற 7 ஓவரில் 60 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது ராஜஸ்தான் அணி.

MI, 2026
MI, 2026

ஆனால் அதற்கு பிறகு சிறப்பாக விளையாடிய துருவ் ஜூரல், தசுன் ஷனகா மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் 3 பேரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 205 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் அணி.

206 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிவரும் மும்பை அணி 24 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com