ரோகித் சர்மா - சுப்மன் கில்
ரோகித் சர்மா - சுப்மன் கில்web

ODI கேப்டன் பதவியிலிருந்து ரோகித் நீக்கம்.. புதிய கேப்டனாக கில் தேர்வு!

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணுத்துக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on
Summary

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணுத்துக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ODI கேப்டனாக ரோகித் சர்மா நீக்கப்பட்டு சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடவிருக்கிறது.

ஒருநாள் தொடர் அக்டோபர் 19 முதல் 25-ம் தேதி வரையிலும், டி20 தொடர் அக்டோபர் 29 முதல் நவம்பர் 08-ம் தேதி வரையிலும் பெர்த், அடிலயிடு, சிட்னி, மெல்போர்ன் முதலிய ஆடுகளங்களில் நடக்கவிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிcricinfo

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்ட்னாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோகித் சர்மா - சுப்மன் கில்
1979, 1986, 2007, 2025| நான்கு முறை மட்டுமே நிகழ்த்தப்பட்ட சாதனை.. இந்திய வீரர்கள் அசத்தல்!

டெஸ்ட், ODI இரண்டிற்கும் கில் கேப்டன்..

இந்திய அணியின் கேப்டனாக 2024 டி20 உலகக்கோப்பை வென்ற ரோகித் சம்ரா, கோப்பை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதற்குபிறகு இந்திய அணியின் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டுவருகிறார்.

இந்தசூழலில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற கேப்டன் ரோகித் சர்மா, 2027 ஒருநாள் உலகக்கோப்பையையும் வெல்வார் என்ற நம்பிக்கையுடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருந்துவருகின்றனர்.

2024 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி
2024 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிx
ரோகித் சர்மா - சுப்மன் கில்
அதிக சிக்சர்கள்| தோனியை பின்னுக்கு தள்ளிய ஜடேஜா!

இந்நிலையில் இந்தமாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது, ரோகித் சர்மாவின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. ரோகித் சர்மா ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது ஏன்? என்றும், ஒருவேளை 2027 உலகக்கோப்பையில் விளையாடுவார்களா? இல்லையா? அணியிலிருந்து நீக்கப்பட்டு விடுவார்களா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய ODI அணி:

சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கேஎல் ராகுல் (WK), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல்

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய டி20 அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (WK), வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் (WK).

ரோகித் சர்மா - சுப்மன் கில்
தல வழியில் தளபதி.. தோனி வரிசையில் ஜடேஜா செய்த சம்பவம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com