rohit sharma
rohit sharmaCricinfo

5 டி20 சதங்கள்! 90 சிக்சர்கள்! ஒரே போட்டியில் ரோகித் சர்மா படைத்த 5 உலக சாதனைகள்!

இந்திய கேப்டன் ரோகித் சர்மா டி20 ஃபார்மேட்டில் சரியாக விளையாடுவதில்லை என்ற தன்மீதான அனைத்து விமர்சனங்களையும் உடைத்து சாதனைக்கு மேல் சாதனை படைத்து அசத்தியுள்ளார். கேப்டனாகவும், வீரராகவும் ஒரே டி20 போட்டியில் ரோகித் படைத்த பல சாதனைகள்..

1. டி20 கேப்டனாக அதிக சிக்சர்கள்!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 8 சிக்சர்களை விளாசிய ரோகித் சர்மா, டி20 கேப்டனாக அதிக சிக்சர்கள் அடித்தவர் என்ற எய்ன் மோர்கனின் உலக சாதனையை உடைத்து அசத்தியுள்ளார்.

Rohit Sharma
Rohit Sharma

ஒரு சர்வதேச டி20 அணியின் கேப்டனாக அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில், 86 சிக்சர்களுடன் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் எய்ன் மோர்கன்ன் முதலிடம் பிடித்து உலக சாதனையை தன்வசம் வைத்திருந்தார். தற்போது 90 சிக்சர்களை பதிவுசெய்திருக்கும் ரோகித் சர்மா, மோர்கனின் சாதனையை உடைத்துள்ளார்.

2. 5 டி20 சதங்கள் அடித்து உலக சாதனை!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5 சதங்களை பதிவுசெய்த முதல் சர்வதேச வீரர் என்ற உலக சாதனையை படைத்து அசத்தியுள்ளார் ரோகித் சர்மா. இதற்கு முன் 4 சதங்களுடன் முன்னிலையில் இருந்த ரோகித் சர்மாவின் சாதனையை, க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் தலா 4 டி20 சதங்களை அடித்து சமன் செய்திருந்தனர்.

Rohit Sharma
Rohit Sharma

இந்நிலையில் அனைவரின் சாதனையையும் முறியடித்து முதல் வீரராக 5 டி20 சதங்களை பதிவுசெய்து மிரட்சியை ஏற்படுத்தியுள்ளார் ரோகித் சர்மா. இந்தப்பட்டியலில் ரோகித் சர்மா 5 சதங்கள், மேக்ஸ்வெல் 4, சூர்யகுமார் 4, பாபர் அசாம் 3, காலின் முன்ரோ 3, சபாவூன் டாவிசி 3 முதலிய வீரர்கள் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர்.

3. அதிக வயதில் டி20 சதம் விளாசல்!

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒரு நாட்டிலிருந்து அதிக வயதில் டி20 சதமடிக்கும் முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா பதிவுசெய்து அசத்தியுள்ளார்.

Rohit Sharma
Rohit Sharma

இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு 36 வயது 117 நாட்களுடன் கிறிஸ் கெய்ல் இங்கிலாந்துக்கு எதிராக டி20 சதத்தை பதிவுசெய்திருந்தார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சதத்துடன் 38 வயது 262 நாட்களுடன் கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார் ரோகித் சர்மா.

4. 5-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 5-வது விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்த ரோகித் மற்றும் ரின்கு சிங் கூட்டணி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் அடித்த முதல் இணை என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளது.

rohit - rinku
rohit - rinku

அதேபோல ஒரு டி20 போட்டியில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பதிவுசெய்த முதல் இந்திய இணை என்ற சாதனையையும் ரோகித்-ரின்கு இருவரும் படைத்துள்ளனர்.

5. கேப்டனாக அதிக டி20 சதங்கள்!

Rohit Sharma
Rohit Sharma

ரோகித் சர்மா தன்னுடைய 5 டி20 சதங்களில் 3 சதத்தை இந்திய அணியின் கேப்டனாக பதிவுசெய்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ஒரு டி20 கேப்டன் பதிவுசெய்த அதிக (3) சதங்கள் என்ற பாபர் அசாமின் சாதனையை சமன்செய்துள்ளார் ரோகித். பாபர் அசாம் தன்னுடைய 3 சதங்களையும் கேப்டனாகவே பதிவுசெய்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com