\
ரோகித் - கோலி
ரோகித் - கோலிweb

3வது ODI| இந்திய அணியில் பும்ரா, துபே OUT.. 400வது போட்டியில் சேர்ந்து களமிறங்கும் ரோகித்-கோலி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
Published on
Summary

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. காயம் காரணமாக பும்ரா ஓய்வு, ஷிவம் துபே நீக்கம்; கேஎல் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டார். லார்ட்ஸில் இரண்டாவது பேட்டிங் செய்த அணி இதுவரை வெல்லாத நிலையில், இந்தியா எப்படிப் பதிலளிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஒரு போட்டியில் கூட வெல்லாத இந்திய அணி 0-4 என படுதோல்வியை சந்தித்தது,

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவரும் நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தலா 1 போட்டியில் வெற்றிபெற்றுள்ளன.

1-1 என தொடர் சமநிலையில் இருக்கும் சூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

பரபரப்பாக தொடங்கியுள்ள போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. இந்திய அணியில் காயம் காரணமாக பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது, மேலும் கேஎல் ராகுல் உள்ளே எடுத்துவரப்பட்டு ஷிவம் துபே ரெஸ்ட் செய்யப்பட்டுள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி வெற்றிபெற்றதே இல்லை என்பதால், இந்தியா என்ன செய்யப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சேர்ந்து 400வது சர்வதேச போட்டியில் விளையாடுவதால், இந்த ஜோடி இந்தியாவிற்கு வெற்றியை தேடி தருமா என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ரோகித் சர்மா - விராட் கோலி
ரோகித் சர்மா - விராட் கோலி

இந்தியா ஆடும் அணி :

ரோகித் சர்மா, சுப்மன் கில்(கேப்டன்), விராட் கோலி, இஷான் கிஷன்(கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்சர் படேல், குர்னூர் பிரார், பிரின்ஸ் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா

ரோகித் - கோலி
கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மெஸ்ஸி படைக்கவிருக்கும் 11 சாதனைகள்! என்னென்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com