ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்icc

ஒரே டெஸ்ட் தொடரில் 6 சாதனைகள்.. காயத்தின் வலியோடு வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இந்த தொடரில் மட்டும் 6 சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.

1. 90* சிக்சர்கள்

Rishabh Pant Creates history
புதிய வரலாறு படைத்த ரிஷப் பண்ட்cricinfo

இந்தியாவிற்காக அதிக டெஸ்ட் சிக்சர்கள் அடித்த வீரராக சேவாக்கின் சாதனையை சமன்செய்துள்ளார் ரிஷப் பண்ட். இருவரும் 90 சிக்சர்களுடன் இருக்கும் நிலையில், இன்னும் கூடுதலாக ஒரு சிக்சர் அடித்தால் ரிஷப் பண்ட் இந்தியாவிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக மாறுவார்.

2. 14 அரைசதங்கள்

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

SENA நாடுகளில் அதிக டெஸ்ட் அரைசதங்கள் அடித்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் சாதனை படைத்துள்ளார்.

3. 5 அரைசதங்கள்

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பராக சாதனை

4. 479* ரன்கள்

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்x

ஒரு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் சாதனை படைத்துள்ளார்.

5. 2731* ரன்கள்

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக மாறியுள்ளார் ரிஷப் பண்ட். முதலிடத்தில் 2717 ரன்களுடன் இருந்த ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளினார்.

6. 1035* ரன்கள்

இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்கள் அடித்த முதல் வெளிநாட்டு விக்கெட் கீப்பராக சாதனை படைத்துள்ளார் ரிஷப் பண்ட். முதலிடத்திலிருந்த தோனியின் சாதனை முறியடித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com