\
rishabh pant
rishabh pantbcci

அதிக டெஸ்ட் சிக்சர்கள்.. அனைத்து SENA நாடுகளிலும் சதம்.. 3 மகத்தான சாதனைகள் படைத்த ரிஷப் பண்ட்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 720 ரன்கள் குவித்துள்ளது இந்திய அணி.
Published on: 
Summary

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில், இந்தியா 720 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தது. ரிஷப் பண்ட் 128 ரன்கள் அடித்து வரலாற்று சாதனை படைத்தார். 352 ரன்கள் முன்னிலையில், நியூசிலாந்து 112/2 என இரண்டாவது இன்னிங்ஸில் போராடி வருகிறது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

டி20 தொடரை 3-2 என வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-1 என வென்று அசத்தியது. இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது.

வெல்லிங்டனில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 70 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தாலும் நிக்கோல்ஸ் மற்றும் பிலிப்ஸ் இருவரின் சதத்தின் உதவியால் 368 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நிக்கோல்ஸ் 175 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தசூழலில் தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 85 ரன்கள், கேஎல் ராகுல் 136 ரன்கள், படிக்கல் 80 ரன்கள், கேப்டன் சுப்மன் கில் 98 ரன்கள் என அடித்து அசத்தினர். 3ஆம் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 486 ரன்கள் அடித்திருந்தது இந்திய அணி.

தொடர்ந்து இன்று 4ஆம் நாள் ஆட்டம் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் அதிரடியாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 128 ரன்கள் அடித்து அசத்தினார். தொடர்ந்து வந்த துருவ் ஜூரலும் 78 ரன்கள் அடித்து மிரட்ட 9 விக்கெட்டுகளை இழந்து 720 ரன்கள் குவித்த இந்தியா டிக்ளார் செய்தது.

352 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 112/2 என நியூசிலாந்து விளையாடிவருகிறது. முதல் இன்னிங்ஸில் பும்ரா பந்தில் 0 ரன்னில் வெளியேறிய நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம், இரண்டாவது இன்னிங்ஸிலும் பும்ராவிடம் 0 ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறினார்.

rishabh pant
ஸ்டீவ் ஸ்மித் செய்த மாபெரும் தியாகம்: கொண்டாடும் கிரிக்கெட் உலகம்.. அம்பலமான ஆஸ். அணியின் கோர முகம்!

ரிஷப் பண்ட் படைத்த வரலாறு!

நியூசிலாந்து மண்ணில் 128 ரன்களை அடித்ததன் மூலம் SENA நாடுகளான தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளிலும் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற வரலாறை எழுதினார்.

அதேபோல இந்தப்போட்டியில் 6 சிக்சர்களை அடித்த ரிஷப் பண்ட் SENA நாடுகளில் 50 சிக்சர்களை கடந்த முதல் ஆசிய பேட்டராகவும் வரலாறு படைத்தார்.

rishabh pant
rishabh pantbcci

அதுமட்டுமில்லாமல் டெஸ்ட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடத்திலிருந்த பிரெண்டன் மெக்கல்லம்மின் 107 சிக்சர்கள் சாதனையை முறியடித்து 108 சிக்சர்களுடன் 2வது இடத்தில் நீடிக்கிறார் பண்ட். முதலிடத்தில் 138 சிக்சர்களுடன் பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார்.

rishabh pant
இந்திய பந்துவீச்சில் 26 ரன்னுக்கு சுருண்ட நேபாள்.. சதம் விளாசி குமார் குஷாக்ரா மிரட்டல்!