இனி ரூ.27 கோடி வீரர் இல்லை.. LSG-லிருந்து வெளியேறிய ரிஷப் பண்ட்.! டெல்லி அணிக்கு TRADE!
ஐபிஎல் வரலாற்றில் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்ட ரிஷப் பண்ட், இப்போது அந்த அணியிலிருந்து விலகி மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார். கேப்டனாக இருந்த பண்ட், TRADE ஒப்பந்தத்தின் மூலம் வெறும் 15 கோடிக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் 13.5 கோடிக்கு லக்னோ அணியில் சேர்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் அதிக தொகைக்கு விலைக்கு வாங்கப்பட்ட வீரராக இருந்த ரிஷப் பண்ட், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து விலகி டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார். அவருக்கு பதிலாக குல்தீப் யாதவை வர்த்தகம் செய்துள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்டை வெளியேற்றியுள்ளது.
அதிலும் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக இருந்த பண்ட்டை வெறும் 15 கோடி ரூபாய்க்கு டெல்லி அணிக்கு அனுப்பியுள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, அவருக்கு பதிலாக 13.5 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி அனுப்பியுள்ளது.
2016 முதல் 2024 வரை ஒன்பது சீசன்கள் டெல்லி அணிக்காக விளையாடிய ரிஷப் பண்ட் மீண்டும் அதே அணிக்கு திரும்பியுள்ளார்.

