அதே வேகம்.. அதே அதிரடி.. பறந்த சிக்சர்! 15 மாதங்கள் கழித்து மேட்ச் விளையாடும் ரிஷப் பண்ட்!

2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தயாராகும் வகையில் விபத்துக்கு பிறகு முதல்முறையாக வார்ம்-அப் போட்டியில் பேட்டிங் செய்துவருகிறார் ரிஷப் பண்ட்.
ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்IPL

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் விதமாக தன்னை தயார் படுத்திவருகிறார். ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் ஒரு மாதமே மீதமிருக்கும் நிலையில், 15 மாதங்களுக்கு பிறகு முதல் வார்ம் அப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

மிகப்பெரிய விபத்துக்கு பிறகு படுகாயமடைந்து உயிர்பிழைத்த ரிஷப் பண்ட், பிசிசிஐ-ன் உதவியால் லண்டனில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) மறுவாழ்வு பெற்று வரும் பண்ட், ஆலூரில் தன்னுடைய முதல் வார்ம்-அப் போட்டியில் பங்கேற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரிஷப் பண்ட்
கடினமான நேரத்தில் அஸ்வினுக்காக வாடகை விமானத்தை ஏற்பாடு செய்த பிசிசிஐ! ரவி சாஸ்திரி பாராட்டு!

அதே வேகம்.. அதே அதிரடி.. பறந்த லாங் சிக்சர்!

அதிரடிக்கு பெயர் போனவரான ரிஷப் பண்ட், பெரிய விபத்தில் சிக்கிய பிறகு எப்படி தன்னை மீட்டு எடுத்துவருவார் என்ற கவலை இந்திய கிரிக்கெட் அணிக்கு நிச்சயம் இருந்தது. இந்திய கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் இல்லாததால் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும், 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த போது, அனைத்து இந்திய ரசிகர்களும் ரிஷப் பண்ட்டை நிச்சயம் மிஸ் செய்தார்கள். அப்படியொரு மேட்ச் வின்னிங் வீரர் மீண்டும் இந்திய கிரிக்கெட்டுக்கு திரும்புவது ஆரோக்கியமானதாக இருக்கும்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

க்றிக்பஸ் வெளியிட்டிருக்கும் தகவல் படி, ஆலூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ரிஷப் பண்ட் வார்ம்-அப் போட்டியில் பங்கேற்று விளையாடிவருகிறார். சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் வீடியோவில், “ரிஷப் பண்ட் எப்படி சென்றாரோ, அதேவேகம் மற்றும அதிரடியோடு திரும்பியிருக்கிறார். பந்தை சிக்சருக்கு அனுப்பும் காட்சியும்” பதிவாகியுள்ளது.

2024 ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் டெல்லி கேபிடல்ஸ் அணி ரிஷப் பண்ட்டின் வருகையை உறுதிசெய்துள்ளது. ஆனால் பண்ட் ஒரு வீரராக மட்டுமே கலந்துகொள்ளவிருக்கிறார். விக்கெட் கீப்பிங் செய்வதற்கென தனி வீரரை டெல்லி கேபிடல்ஸ் பயன்படுத்தவுள்ளது. ஒருவேளை பண்ட் கேப்டன்சி செய்யாத பட்சத்தில், கடந்த ஐபிஎல் தொடரில் வழிநடத்திய டேவிட் வார்னர் கேப்டனாக செயல்படுவார். இந்திய நாடாளுமன்ற தேர்தலால் ஐபிஎல் போட்டிகளின் தேதியை உறுதிப்படுத்துவதில் பிசிசிஐ காத்திருக்கிறது.

ரிஷப் பண்ட்
சதமடித்த போதும் ஏன் வாய்ப்பை பறித்தீர்கள் என தோனியிடம் கேட்க விரும்புகிறேன்! - ஓய்வுபெற்ற IND வீரர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com