இரண்டாம் புகைப்படம் ரசிகர்களின் எடிட்..
இரண்டாம் புகைப்படம் ரசிகர்களின் எடிட்..pt web

Reunion of the year? கோலி, ரிஷப் பந்திற்கு இரவு விருந்தளித்த தோனி.. அதிரும் சமூக வலைதளம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன், விராட் கோலி, ரிஷப் பந்த், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் ராஞ்சியில் தோனியின் வீட்டில் நடைபெற்ற இரவு விருந்தில் கலந்து கொண்டனர்.
Published on
Summary

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன், விராட் கோலி, ரிஷப் பந்த், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் ராஞ்சியில் தோனியின் வீட்டில் நடைபெற்ற இரவு விருந்தில் கலந்து கொண்டனர். தோனி நேரில் வரவேற்று, விருந்துக்குப் பிறகு கோலியை தானே காரில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்ரிக்காவே வெற்றி பெற்றிருக்கிறது. அடுத்ததாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கும் நிலையில் முதல் போட்டி நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சியில் தொடங்க இருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. விராட்கோலி மற்றும் ரோகித் சர்மா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். இந்நிலையில்தான், ஞாயிறன்று தொடங்கும் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி, ரிஷப் பந்த், ருத்துராஜ் கெயிக்வாட் போன்றோர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். தோனி ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்துகொள்ள கிரிக்கெட் வீரர்கள் சென்றதுதான் காலை முதலே இணையவாசிகளுக்கான டாபிக்காக உள்ளது.  

இரண்டாம் புகைப்படம் ரசிகர்களின் எடிட்..
WPL Auction | ரூ.3.2 கோடிக்கு ஏலம் போன தீப்தி சர்மா.. விலை போகாத ஆஸி. கேப்டன்! - முழுவிபரம்

கிரிக்கெட் வீரர்கள் தோனியின் வீட்டிற்கு சென்றது தொடர்பாக பல வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக தோனி, கோலியை வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் காட்சிகள் சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் அதைவிட பேசுபொருளானது, சந்திப்பு முடிந்ததும் தோனி தானே காரை ஓட்டி மீண்டும் கோலியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதுதான். ஓட்டுநர் இருக்கையில் தோனி இருக்க, அருகில் கோலி அமர்ந்திருந்ததைக் கண்ட ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.

விராட் கோலி தற்போது ஒருநாள் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர்ச்சியாக இரு போட்டிகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்த கோலி மூன்றாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்திருந்தார். ரோகித் 121 ரன்களைக் குவித்திருந்த நிலையில், அவருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த கோலி 74 ரன்களைக் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.

கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ராஞ்சிக்குச் சென்ற இந்திய வீரர்கள் இதற்கு முன்பு தோனியின் வீட்டில் இரவு விருந்துகளில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்றாவது போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அப்போது ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் அணியையும் தனது வீட்டிற்கு அழைத்த தோனி, அவர்களுக்கு இரவு விருந்தளித்தார்.

இரண்டாம் புகைப்படம் ரசிகர்களின் எடிட்..
நின்றுபோன ஸ்மிருதி திருமணம்.. WBBL தொடரிலிருந்து விலகிய ஜெமிமா.. இப்படியொரு உருக்கமான காரணமா?

இந்திய அணியின் நிரந்தர ஒருநாள் கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணைக் கேப்டன் ஷ்ரேயாஸ் போன்றோர் காயத்தால் அவதிப்படும் நிலையில், கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டு இருக்கிறார். 88 போட்டிகளில் 3,092 ரன்கள் எடுத்துள்ள ராகுல், 48.31 சராசரி மற்றும் 88.41 ஸ்டிரைக் ரேட்டுடன் வலுவான ஒருநாள் வீரராக இருக்கிறார். ரிஷப் பந்த் ருதுராஜ் போன்றோர் மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியுற்றிருக்கும் நிலையில், ஒருநாள் தொடரில் வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. விராட் ரோகித் போன்ற அனுபவமிக்க வீரர்கள் அணியில் இருப்பது அணிக்கான பலமாக பார்க்கப்படுகிறது.

இந்தியா அணி:
ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார், ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரேல்.

இரண்டாம் புகைப்படம் ரசிகர்களின் எடிட்..
’இது முழுக்க முழுக்க கம்பீரால் வந்த அழிவு..’ அனைத்து முடிவுகளுமே கேலிக்குரியது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com