ஒருவேளை இந்தியா - பாக். போட்டி மழைநாள் தடைபட்டால்.. டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு குஷியான அறிவிப்பு

ஆசியக்கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.
IND - PAK
IND - PAKTwitter

2023 ஆசியக்கோப்பை தொடரானது ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. தொடரின் 6 லீக் போட்டிகள் நடந்துமுடிந்த நிலையில், சூப்பர் 4 சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளன. லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் முதலிய நான்கு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. நேபாள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தொடரை விட்டு வெளியேறியுள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் மோதிய லீக் போட்டி மழையால் தடைபட்டது!

செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் லீக் போட்டியில் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு எதிரான அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள், இந்திய அணியை ஒரு கட்டத்தில் ஆட்டம் காண வைத்தனர். பின்னர் இளம் வீரர் இஷான் கிஷன் மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவரின் அற்புதமான பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி 266 என்ற டோட்டலை எட்டியது.

Ishan Kishan - Hardik Pandya
Ishan Kishan - Hardik Pandya

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை பாகிஸ்தான் அணி தொடங்கும்போது மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது. அந்த போட்டியில் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணி சிறப்பாகவே விளையாடியது. இரண்டு மிகப்பெரிய அணிகள் மோதிய போட்டியில் முடிவில்லாமல் போனது பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதுமட்டுமல்லாமல் எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லக்கூடிய வரிசையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இருக்கும் நிலையில், இரண்டு அணிகளுக்குமான போட்டியில் ரசிகர்கள் முடிவை எதிர்ப்பார்க்கின்றனர்.

சூப்பர் 4 போட்டி மோதல் மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே!

கடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், வரும் சூப்பர் 4 சுற்று போட்டியில் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் பிரத்யேகமாக ரிசர்வ் டே வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் 10ஆம் தேதி ஞாயிற்று கிழமையன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொலம்போவில் நடைபெறும் இந்த போட்டியில் 90% மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ind vs pak
ind vs pak

இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்று போட்டியானது மழையால் பாதிகப்பட்டால், ரிசர்வ் டே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழையால் போட்டி தடைபட்டால் மறுநாள் போட்டியை காணும் வகையில் டிக்கெட்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முதலில் இந்தியா பாகிஸ்தான் மோதும் சூப்பர் 4 போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதால், அதனை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என பாகிஸ்தான் நிர்வாகம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் கோரிக்கை வைத்திருந்தது. அதனை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்த நிலையில், தற்போது ரிசர்வ் டே வழங்கப்பட்டுள்ளது.

ind
ind

செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் டே இருந்த நிலையில், தற்போது இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் பிரத்யேகமாக ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஒருவேளை போட்டி முழுமையாக நடக்கவில்லை என்றால் முழு போட்டியும் மறுநாள் நடத்தப்படும். இல்லை பாதியில் தடைப்பட்டால் முந்தைய நாளின் கடைசிபந்திலிருந்து மறுநாள் விளையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com