“8 வீரர்கள் அவுட் ; 32 கோடி கையிருப்பு”-பென் ஸ்டோக்ஸ், ராயுடுவை வெளியேற்றிய CSK!தோனி விளையாடுகிறார்?

எதிர்வரும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக 8 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ben stokes - csk
ben stokes - cskTwitter

2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், ஒவ்வொரு அணியும் அவர்களுடைய வெளியிடும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது. வீரர்கள் பட்டியலை வெளியிடும் கடைசி நாளாக இன்று நவம்பர் 26ஆம் தேதிவரை அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து அணிகளும் அவர்களுடைய அணி வீரர்களின் விவரங்களை வெளியிட்டு வருகின்றன.

ben stokes
ben stokes

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்படும் மற்றும் வெளியேற்றப்படும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முழங்கால் பிரச்னை மற்றும் பணிச்சுமை காரணமாக 2024 ஐபிஎல் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய பெயரையும் ரிலீஸ் செய்யும் வீரர்கள் பட்டியலில் இணைத்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம். அதேபோல் கடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பிறகு ரிட்டயர்ன்மெண்ட் அறிவித்த அம்பத்தி ராயுடுவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஓய்விற்கு பிறகு அமெரிக்காவின் டி20 லீக் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ராயுடு விளையாடிவரும் நிலையில், மீண்டும் ராயுடு ஐபிஎல்லில் விளையாடுவாரா இல்லை அவ்வளவுதானா என்ற குழப்பமும் நீடிக்கிறது.

ரிலீஸ் செய்யப்பட்ட 8 சிஎஸ்கே வீரர்கள்:

பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், கைல் ஜேமிசன், சிசண்டா மகலா, ஆகாஷ் சிங், பகத் வர்மா, சுப்ரான்சு சேனாபதி.

தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியல்:

மெயின் வீரர்கள் : எம்எஸ் தோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, சிவம், துபே, அஜிங்க்யா ரஹானே, டெவோன் கான்வே, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா.

பேக்கப் வீரர்கள் : மிட்செல் சான்ட்னர், மதீஷ பத்திரன, பிரசாந்த் சோலங்கி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சிம்ரன்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, ஷேக் ரஷீத், அஜய் மண்டல்.

இதுவரை கேப்டன் எம்எஸ் தோனி 2024 தொடர் முழுவதும் விளையாடுவதற்கான 90% சாத்தியக்கூறுகள் மட்டுமே தெரிகின்றன. 8 வீரர்களை வெளியேற்றிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தற்போது 32.1 கோடி கையிருப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com