விராட் கோலி
விராட் கோலிweb

’இம்பேக்ட் வீரராக ஒருபோதும் விளையாட மாட்டேன்; அந்தநிலை வந்தால் ஓய்வுபெறுவேன்’ - விராட் கோலி

எந்த நிலையிலும் இம்பேக்ட் வீரராக விளையாட மாட்டேன் என்று விராட் கோலி சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on
Summary

ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஒருபோதும் ஐபிஎல்லில் இம்பேக்ட் வீரராக விளையாட மாட்டேன் என்றும், ஒருவேளை அந்தநிலை வந்தால் ஓய்வை அறிவிப்பேன் என்றும் கூறியதாக சக ஆர்சிபி வீரர் ஒருவர் கூறியுள்ளார்.

நவீன கிரிக்கெட் உலகின் கோட் வீரர் என அனைத்து உலக வீரர்களாலும் புகழப்படுவர் விராட் கோலி. ஒருநாள் போட்டிகளில் 50 சர்வதேச சதங்கள் அடித்த ஒரே வீரராக வரலாறு படைத்திருக்கும் கிங் கோலி, இளம் வீரர்களின் வழிகாட்டியாகவும், உத்வேகமாகவும் இருந்துவருகிறார்.

விராட் கோலி
விராட் கோலி

ரன் மெஷின் என கொண்டாடப்படும் விராட் கோலியின் கிரிக்கெட் மூளை எப்படி செயல்படுகிறது, அவரிடம் இருந்து கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எல்லா இளம் வீரர்களிடமும் இருந்துவருகிறது.

அந்தவகையில் 2025 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய 20 வயது வீரரான ஸ்வஸ்திக் சிகாரா, விராட் கோலியிடம் பேசிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஒருபோதும் இம்பேக்ட் வீரராக விளையாட மாட்டேன்..

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த வலது கை பேட்ஸ்மேனான ஸ்வஸ்திக் சிகாரா, ஐபிஎல்லில் தனது இன்ஸ்பிரேஷன் நட்சத்திர வீரரான விராட் கோலியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து உரையாடியதை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

விராட் கோலி - ஸ்வஸ்திக் சிகாரா
விராட் கோலி - ஸ்வஸ்திக் சிகாரா

ரெவ்ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் பேசிய அந்த இளைஞர், விராட் கோலி ஃபிட்டாக இருக்கும்வரை டி20 போட்டியில் விளையாட விரும்புவதாகவும், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டங்களில் கூட இம்பேக்ட் வீரராக விளையாட மாட்டேன் என்றும் கோலி தெளிவுபடுத்தியதாகக் கூறினார்.

விராட் கோலி
விராட் கோலிIPL

இண்டர்வியூவில் பேசியிருக்கும் ஸ்வஸ்திக், “நான் முழு உடல் தகுதியுடன் இருக்கும் வரை கிரிக்கெட் விளையாடுவேன். இம்பாக்ட் பிளேயராக எப்போதும் விளையாட மாட்டேன். சிங்கம் போல விளையாடுவேன்" என்று விராட் பையா கூறினார்.

மேலும், ”என்னால் 20 ஓவர்கள் முழுவதும் ஃபீல்டிங் செய்துவிட்ட பிறகும் பேட்டிங் செய்யமுடியும். ஒருவேளை நான் அன்ஃபிட்டாகும் நிலைவரும்போது ஒரு இம்பாக்ட் வீரராக விளையாடவே மாட்டான். அந்த நிலை வந்தால் நான் கிரிக்கெட்டை விட்டுவிடுவேன்” என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com