\
RCB Most Valued IPL Team At USD 312 Million
RCBweb

கிரிக்கெட் அணிகளின் பிராண்ட் மதிப்பு.. முதல் இடத்தைப் பிடித்த RCB!

உலகளவில் 300 மில்லியன் டாலர் பிராண்ட் மதிப்பைத் தாண்டிய முதல் கிரிக்கெட் அணி என்ற பெருமையை RCB பெற்றுள்ளது.
Published on

ஐபிஎல் அணிகளில் ஒன்றான, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், உலகளவில் 300 மில்லியன் டாலர் பிராண்டு மதிப்பை அதாவது, 2,870 கோடி ரூபாய் மதிப்பைக் கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெற்றுள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான ஹூலிகன் லோக்கி என்ற முதலீட்டு வங்கி இத்தகவலை தெரிவித்துள்ளது. ஆர்சிபி அணியின் பிராண்டு மதிப்பு கடந்தாண்டைவிட, 16 சதவீதம் அதிகரித்துள்ளது மூலம் 312 மில்லியன் டாலரை தொட்டுள்ளதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது.

மைதானத்திலும் டிஜிட்டல் தளங்களிலும் RCB அணிக்கு இருக்கும் இணையற்ற, தீவிரமான ரசிகர்களின் ஆதரவே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் 264 மில்லியன் டாலர்களுடன் 2ஆவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 245 மில்லியன் டாலர் மதிப்புடன் 3ஆவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 244 மில்லியன் மதிப்புடன் 4ஆவது இடத்திலும் உள்ளன. சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மதிப்பு 169 மில்லியன் டாலராக உள்ளது. ஐபிஎல் அமைப்பின் மொத்த மதிப்பு 11.6 சதவீதம் உயர்ந்து 20.6 பில்லியன் டாலர் அதாவது, 1 லட்சத்து97 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து உலகின் மதிப்பு வாய்ந்த டி20 தொடராக தொடர்வதாகவும் அந்த வங்கி கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com