RCB finally break silence 84 days after stampede row
rcbx page

கூட்ட நெரிசல்.. ரசிகர்கள் உயிரிழப்பு.. 84 நாட்களுக்குப் பிறகு மவுனம் கலைத்த RCB!

ரசிகர்களின் உயரிழப்பிற்குப் பிறகு, அதாவது 84 நாட்களுக்கு பிறகு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் மவுனம் கலைத்துள்ளது.
Published on
Summary

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சாம்பியன் பட்டம் வெற்றிக்குப் பிறகு நடந்த கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 84 நாட்கள் மவுனம் கலைத்த RCB நிர்வாகம், ஜூன் 4 நிகழ்வு இதயங்களை உடைத்துவிட்டதாகவும், ரசிகர்களுக்கு ஆறுதல் கூறுவதே தங்கள் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளது.

18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 17 ஆண்டுகால கனவு நனவுக்கு வந்தது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்குக் கடந்த ஜூன் 4 மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து ஓய்வு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில், நீதி விசாரணைக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவரது தலைமையிலான குழுவினர், சமீபத்தில் அந்த விசாரணை அறிக்கையை முதல்வர் சித்தராமையாவிடம் அளித்தனர். மறுபுறம், கர்நாடக உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியது. மேலும், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தது தொடர்பான குறித்த நிலை அறிக்கையை வெளியிடுமாறு கர்நாடகா உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, நிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ”போலீஸாரைக் கலந்தாலோசிக்காமல் பொதுமக்களை RCB அழைத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் 84 நாட்களுக்கு பிறகு மவுனம் கலைத்துள்ளது. பெங்களூரு ஐபிஎல் கொண்டாட்ட உயிரிழப்புகளுக்கு பிறகு RCB அணியின் சமூக தள கணக்குகளில் எந்த பதிவும் பகிரப்படப்படவில்லை. இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பதிவில், ஜூன் 4ஆம் தேதி நிகழ்வு நம் இதயங்களை உடைத்துவிட்டது என்றும் நீண்ட அமைதியால் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு துணை நிற்கவும் ஆறுதல் கூறுவதும் கவுரவப்படுத்துவதுமே தங்கள் நோக்கம் என அதில் கூறப்பட்டுள்ளது.

RCB finally break silence 84 days after stampede row
பெங்களூரு ரசிகர்கள் உயிரிழப்பு.. RCB நிர்வாகமே காரணம்.. நிலை அறிக்கை வெளியீடு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com