ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்முகநூல்

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்.
Published on

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் முதன்மை ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 38 வயதான அஸ்வின், பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியை இந்தியா டிரா செய்த சிறிது நேரத்திலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டார். சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவர், சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 6 சதங்கள் உள்பட 3,506 ரன்கள் குவித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் இந்திய அணி 80 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தபோது சதம் விளாசி அணியைக் காப்பாற்றினார்.

அஸ்வின்
அஸ்வின்

106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேசப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் சர்வதேச வீரர்கள் பட்டியலில் 7 ஆவது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஓய்வு குறித்த அறிவிப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரவிச்சந்திரன் அஸ்வின்
மேல் எழும்பி மீண்டும் ஸ்டம்பிலேயே நின்ற பெய்ல்ஸ்.. 98 ரன்னில் தப்பித்த அதிர்ஷ்டசாலி வீரர்! #Viral

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com