அணிக்கு திரும்பிய ரஜத் பட்டிதார்.. RCB-க்கு எதிராக SRH பேட்டிங்!
டாப் 2 இடத்தை நோக்கி ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதும் முக்கிய போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்கிறது. ஆர்சிபி அணியில் ஜேக்கப் பெத்தலுக்கு பதிலாக ரஜத் பட்டிதார் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். வெங்கடேஷ் ஐயர் உட்பட வலுவான அணியுடன் ஆர்சிபி களமிறங்க, போட்டி ரசிகர்களுக்கு திகில் தரும் வகையில் அமைகிறது.
2026 ஐபிஎல் தொடரானது புள்ளிப்பட்டியலில் ஒரு பரமபத ஆட்டத்தையே கண்டுவருகிறது. டாப் 4 பட்டியலில் யார் இடம்பெற போகிறார்கள் என்ற குளறுபடியானது கடைசிவரை திகில் கிளப்பிய நிலையில், ஆர்சிபி, குஜராத் மற்றும் ஹைதராபாத் முதலிய 3 அணிகளும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.
மறுமுனையில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ போன்ற அணிகள் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், கடைசி 3 போட்டியிலும் தோல்வியுற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்றைய போட்டியில் குஜராத்திடம் படுதோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
மீதமிருக்கும் 1 இடத்திற்காக பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நிலவிவருகிறது.
இந்நிலையில் டாப் 2 இடங்களில் இடம்பெறுவதற்கான போட்டியில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி டாப் 2-ல் இடம்பிடிக்கும் என்பதால் போட்டி சுவராசியமாக தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற ஹைத்ராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. ஆர்சிபி அணியில் ஜேக்கப் பெத்தலுக்கு பதிலாக ரஜத் பட்டிதார் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். வெங்கடேஷ் ஐயரும் அணியில் இருப்பது ஒரு வலுவான அணியுடன் ஆர்சிபி களம்கண்டுள்ளது.

