rajat patidar
rajat patidarweb

துலீப் டிராபி ஃபைனல்| 12 பவுண்டரிகள் 2 சிக்சர்கள்.. சதம் விளாசிய ரஜத் பட்டிதார்!

துலீப் டிராபி இறுதிப்போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார் மத்திய மண்டல அணி கேப்டன் ரஜத் பட்டிதார்.
Published on

2025 துலீப் டிராபி இறுதிப்போட்டியானது தெற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது.

நேற்று தொடங்கிய இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தெற்கு மண்டல அணி மத்திய அணியின் சிறந்த பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 149 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய சரன்ஸ் ஜெய்ன் 5 விக்கெட்டுகளும், குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

அதனைத்தொடர்ந்து விளையாடிவரும் மத்திய மண்டல அணி 384/5 என்ற வலுவான நிலையில் விளையாடிவருகிறது.

சதம் விளாசிய ரஜத் பட்டிதார்..

சிறந்த ஃபார்மில் இருந்துவரும் ரஜத் பட்டிதார் நடந்துவரும் துலீப் டிராபியின் காலிறுதிப்போட்டியில் சதம், அரைசதம் விளாசினார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதிப்போட்டியிலும் அரைசதமடித்தார்.

இந்த சூழலில் தற்போது நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த பட்டிதார் சதம்விளாசி அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

முதல்தர கிரிக்கெட்டில் 44 சராசரியுடன் 5000 ரன்களை கடந்திருக்கும் ரஜத் பட்டிதார் 15 சதங்களை பதிவுசெய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com