Rajasthan Royals now open to sell entire franchise reportedly at Rs.12,000 crore
ராஜஸ்தான் ராயல்ஸ்எக்ஸ் தளம்

ரூ.12,000 ஆயிரம் கோடிதான்.. அணியை மொத்தமா எடுத்துக்கோங்க! RCB-யைத் தொடர்ந்து RR-ம் விற்பனை!

2008ஆம் ஆண்டின் ஐபிஎல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Published on

மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல்லின் 10 அணிகளில் ஒன்றான, நடப்புச் சாம்பியன் ஆர்.சி.பி. விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதற்கிடையே, 2008ஆம் ஆண்டின் ஐபிஎல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

19ஆவது ஐபிஎல் தொடரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல்லின் 10 அணிகளில் ஒன்றான, நடப்புச் சாம்பியன் ஆர்.சி.பி. விற்பனை செய்யப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விற்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியானது. அது, அதிகாரப்பூர்வமாகவும் உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கான ஏலப் பட்டியலில் பல்வேறு நிறுவனங்கள் போட்டிபோட்டு வரும் நிலையில், நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பே அவ்வணியின் உரிமை கைமாறிவிடும் என்று உறுதியாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 2008ஆம் ஆண்டின் ஐபிஎல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டிஷ்-இந்திய தொழிலதிபரான மனோஜ் படாலே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதன்மை உரிமையாளராக இருக்கும் நிலையில், தாம் நினைக்கும் தொகை கிடைத்தால் மொத்த அணியையும் விற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Rajasthan Royals now open to sell entire franchise reportedly at Rs.12,000 crore
ராஜஸ்தான் ராயல்ஸ்எக்ஸ் தளம்

ஆரம்பத்தில் தங்களது பெரும்பான்மையான பங்குகளை மட்டும் விற்கத் திட்டமிட்டிருந்த ராஜஸ்தான் அணி நிர்வாகம், தற்போது சரியான விலை கிடைத்தால் அணியை முழுமையாக விற்கத் தயாராக உள்ளது. அதாவது, மனோஜ் படாலே முதன்மை உரிமையாளராக இருந்தாலும், அவ்வணியின் உரிமை பல பங்குதாரர்களிடம் பரவியுள்ளது. மனோஜ் படாலே 65 சதவீதப் பங்குகளையும், ரெட் பேர்ட் கேப்பிடல் பார்ட்னர்ஸ் 15 சதவீதப் பங்குகளையும், லாக்லன் முர்டோக் 13 சதவீதப் பங்குகளையும் கொண்டுள்ளனர். மீதமுள்ள பங்குகள் தனிப்பட்ட முதலீட்டாளர்களிடையே பிரிக்கப்பட்டுள்ளன.

Rajasthan Royals now open to sell entire franchise reportedly at Rs.12,000 crore
”ராஜஸ்தான் ராயல்ஸ் எனக்கு வெறும் அணியல்ல வீடு..” - ரவீந்திர ஜடேஜா

ஆக மொத்தத்தில், முழுமையாக அணியை விற்க இந்த அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலும் தேவை என்பதால், இந்தச் செயல்பாடு நடைமுறைக்கு வர சில காலம் ஆகலாம். அதாவது, அணியை விற்பதற்குக் குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை. ஆயினும், ராஜஸ்தான் அணிக்கு தற்போது, சுமார் 9000 முதல் 12,000 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏன், இவ்வளவு குறைவான விலைக்கு அந்த அணி விற்பனை செய்யப்பவிருப்பதற்குப் பின்னால், 2008க்குப் பிறகு அவ்வணி பெரிய வெற்றியைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல், விராட் கோலி போன்ற நட்சத்திர முகங்கள் இல்லை. மேலும், இவ்வணிக்கு மகளிர் அணியும் இல்லை. ஆக இவையெல்லாம் பொதுவான காரணங்களாகப் பார்க்கப்படும் நிலையில், இதுவே அந்த அணிக்கு பெரிய தொகையாகப் பார்க்கப்படுகிறது.

Rajasthan Royals now open to sell entire franchise reportedly at Rs.12,000 crore
ராஜஸ்தான் ராயல்ஸ்எக்ஸ் தளம்

அதேநேரத்தில் இவ்வணியின் இணையணிகளாக SA20-இல் பார்ல் ராயல்ஸும், கரீபியன் பிரீமியர் லீக்கில் பார்படாஸ் ராயல்ஸும் உள்ளன. இதற்கிடையே, அணியின் விற்பனை விவகாரம் வெளியில் கசிந்த சிறிதுநேரத்திலேயே அவ்வணியை வாங்க ஆதித்யா பிர்லா குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. ஆதித்யா பிர்லா குழுமத்துடன் இணைந்து அமெரிக்க தொழிலதிபர் டேவிட் பிளிட்சருடன், கால் சோமானி மற்றும் வால்மார்ட் வாரிசு ராப் வால்டனும் போட்டியில் உள்ளனர். இவர்களைத் தவிர, டைம்ஸ் ஆஃப் இந்தியாவும், கேப்ரி குளோபல் நிறுவனமும் போட்டியில் உள்ளது. இதனால், அந்த அணியும் விரைவில் விற்கப்படலாம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

Rajasthan Royals now open to sell entire franchise reportedly at Rs.12,000 crore
IPL Auction | பலமான பௌலிங் படையை உருவாக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com