rain threat ind Vs pak t20 world cup match colombo weather
pak vs ind captainsPTI

T20 WC | நாளை IND - PAK பலப்பரீட்சை.. போட்டி நடைபெறுமா.. அச்சுறுத்தும் மழை?

டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் நாளை கொழும்பில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
Published on

டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் நாளை கொழும்பில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் மழை அச்சுறுத்தல் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

20 நாடுகள் பங்கேற்று விளையாடி வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் நாளை கொழும்பில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. பரம எதிரிகளான இரண்டும் டி20 உலகக்கோப்பையில் மோத இருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் மழை அச்சுறுத்தல் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ’பிப்ரவரி 15 ஆம் தேதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது" என்று இலங்கை வானிலை ஆய்வுத் துறை என எச்சரித்துள்ளது. மேலும், AccuWeatherஇன் கூற்றுப்படி, ’போட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, மாலை 5 மணியளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், கொழும்பில் ஆட்டத்தின்போது மழை பெய்ய வாய்ப்பில்லை. விளையாட்டு நிலைமைகள் மேகமூட்டத்துடன் இருக்கும். வெப்பநிலை சுமார் 27 டிகிரி செல்சியஸ் மற்றும் 70 களில் ஈரப்பதம் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளது.

rain threat ind Vs pak t20 world cup match colombo weather
pak vs ind captainsPTI

இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இத்தொடரின் 8 போட்டிகளில் 7-இல் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 2021ஆம் ஆண்டு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் ஒரு வெற்றியைப் பெற்றிருந்தது. தற்போதைய தொடரில் இரு அணிகளிலும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. மேலும் இரு அணிகளும் தாங்கள் சந்தித்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆகையால், நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி, சூப்பர் 8 தகுதிச் சுற்றுக்கான இடத்தை வலுப்படுத்தும்.

rain threat ind Vs pak t20 world cup match colombo weather
IND போட்டி புறக்கணிப்பு | ICC உடன் பேச்சுவார்த்தை.. ’24 மணி நேரத்தில் முடிவு..’ பாக். தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com