“என் அணியில் அஸ்வினுக்கு இடமில்லை.. அடுத்த சீசனில் அவர் விற்கப்படாமல் போகலாம்” - சேவாக்

நடப்பு தொடரில் அஸ்வின் விக்கெட்களை வீழ்த்தவில்லை எனில் அடுத்த சீசனில் அவர் ஏலத்தில் விற்கப்படாமல் போகலாம் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
அஸ்வின், சேவாக்
அஸ்வின், சேவாக்pt web

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல்பாதி கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. இதுவரை 9 ஆட்டங்களில் ஆடியுள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

திணறும் அஸ்வின்

ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்PTI

ஆனால் அந்த அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், பஞ்சாப் உடனான போட்டி தவிர்த்து 8 போட்டிகளில் விளையாடி இதுவரை 2 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி ரன்களையும் அதிகளவில் விட்டுக்கொடுத்துள்ளார். ஓவருக்கு 9 ரன்களை வரை விட்டுக்கொடுத்துள்ளது கவனத்திற்கு உரியதாக உள்ளது. சமீபத்தில் விக்கெட் எடுப்பது குறித்து பேசிய அஸ்வின், விக்கெட் எடுப்பதை விட ராஜஸ்தான் அணிக்காக ரன்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார். இதுவும் தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

அஸ்வின், சேவாக்
2011 WC இந்திய அணியில் இடம்பிடித்த கேரி கிறிஸ்டன்.. பாகிஸ்தான் அணி பயிற்சியாளராக நியமனம்!

அஸ்வின் நினைப்பதென்ன? 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான சேவாக், அஸ்வினின் பந்துவீச்சு குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் அவர் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஏனெனில் இடைப்பட்ட ஓவர்களில் எதிரணியின் விக்கெட்டுகள் விழவில்லை. அஸ்வின், பேட்டர்கள் ரன்கள் எடுப்பதை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். இதனால் மற்ற பந்துவீச்சாளர்கள் பேட்டர்களின் அதிரடிக்கு ஆளாகின்றனர். பேட்டர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க இவருக்கு போதுமான அனுபவம் உள்ளது. ஆனால் மற்ற பந்துவீச்சாளர்கள் அப்படி அல்ல. ஏனெனில், அஸ்வினிடம் இழந்த ரன்களை சரிப்படுத்த மற்ற பந்துவீச்சாளர்களிடம் பேட்டர்கள் முயற்சிக்கின்றனர். அதேசமயத்தில் நீங்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

அடுத்த சீசனில் அஸ்வின் விற்கப்படாமல் போகலாம்

சேவாக்
சேவாக்கோப்புப் படம்

கே.எல் ராகுல் ஒருமுறை கூறியதைப் போல், அஸ்வினும் தற்போது கூறுகிறார். டி20 கிரிக்கெட்டில் ஸ்ட்ரைக் ரேட் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என ராகுல் ஒருமுறை தெரிவித்திருந்தார். நான் அணியின் பயிற்சியாளராகவோ அல்லது வழிகாட்டியாகவோ இருந்தால் ஒருபோதும் அவரை ப்ளேயிங் 11-ல் சேர்க்கமாட்டேன். என்னுடைய பந்து வீச்சாளர் ரன்களை சேமித்து விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிக்காமல் இருந்தால் அணியில் இடம்பெறமாட்டார். நடப்பு சீசனில் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டால் அடுத்த சீசனில் அவர் ஏலத்தில் விற்கப்படாமல் போகலாம். நீங்கள் ஒரு பந்துவீச்சாளரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் 25 முதல் 30 ரன்களைக் கொடுப்பார் என எதிர்பார்க்கிறீர்களா அல்லது விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டு அல்லது மூன்று முறை ஆட்டநாயகனாக வருவார் என எதிர்பார்க்கிறீர்களா?

அஸ்வின், சேவாக்
ராகுல் OUT சாம்சன் IN- t20 WC அணியில் யாருக்கு இடம்.. துபே? புதிய தலைமுறைக்கு கிடைத்த பிரத்யேக தகவல்

அவரது போட்டியாளர்களான சாஹல், குல்தீப் யாதவ் போன்றோர் அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்கள். ஆனால் அஸ்வின் ஆஃப் ஸ்பின் வீசினால் பேட்டர்கள் அடிப்பார்கள் என நினைத்து கேரம் பால் வீசுகிறார். எனவே அவருக்கு விக்கெட்டுகள் கிடைப்பதில்லை. அவர் ஆஃப் ஸ்பின் அல்லது தூஸ்ராவை நம்பினால் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தலாம். ஆனால் இது அவருடைய மனநிலை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான மனோஜ் திவாரியும், அஸ்வின் இரண்டு முதல் மூன்று போட்டிகளில் ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அஸ்வின், சேவாக்
“ஆடுபவர்களுக்குத்தான் என்ன நடக்கிறதென தெரியும்”- ஸ்ட்ரைக் ரேட் பற்றிய விமர்சனங்களுக்கு கோலி காட்டம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com