ஸ்ரேயாஸ் ஐயர் - கருண் நாயர்
ஸ்ரேயாஸ் ஐயர் - கருண் நாயர்cricinfo

2 எளிதான கேட்ச்சை விட்ட கருண் நாயர்.. 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்த பஞ்சாப் கிங்ஸ்!

ஐபிஎல் கிரிக்கெட்டில் 265 ரன்களை சேஸ்செய்து வரலாறு படைத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
Published on
Summary

2026 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவித்தபோதும், பஞ்சாப் கிங்ஸ் அசாதாரண ரன் சேஸில் 265 ரன்களை எட்டிப் பிரமாண்ட வெற்றி பெற்றது. பவர்பிளேவில் பிரப்சிம்ரன், பிரியான்ஸ் ஆர்யா கொடுத்த மாபெரும் தொடக்கத்துக்கு பின், கருண் நாயர் விட்ட கேட்ச் வாய்ப்பை பயன்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் வரலாற்று வெற்றியை முடித்தார்.

2026 ஐபிஎல் தொடரானது பல பிரில்லியன்ஸ் திறமைகளையும், அபாரமான போட்டிகளையும் கண்டுவருகிறது. அந்தவகையில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய போட்டியானது வரலாற்றில் புதிய மைல்கல்லை எழுதியது.

கேஎல் ராகுல், 2026
கேஎல் ராகுல், 2026

டெல்லி அருண் ஜெட்லி மைதானமானது பேட்டிங்கிற்கு சொர்க்கமான இடமாக மாறியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கிளாஸ்ஸி ராகுல், பவுலர்களுக்கு கருணையே காட்டாமல் 16 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்து 152 ரன்களை குவித்து மிரட்டினார். இதுதான் ஒரு இந்திய வீரர் ஐபிஎல்லில் அடித்த அதிகபட்ச ரன்களாகும்.

ஒருபக்கம் கேஎல் ராகுல் என்றால் மறுபக்கம் நிதிஷ் ராணா 11 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என துவம்சம் செய்து 44 பந்தில் 91 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 264 ரன்கள் என்ற இமாலய டோட்டலை சேர்த்தது டெல்லி அணி.

ஸ்ரேயாஸ் ஐயர் - கருண் நாயர்
“கணிச்சான், அறிஞ்சான், புரிஞ்சான்..” சஞ்சுவிடம் மட்டுமே வீழ்ந்த மும்பை..! அஸ்வின் புகழாரம்!

265 ரன்களை சேஸ்செய்து வரலாறு படைத்த பஞ்சாப் கிங்ஸ்..

264 ரன்களை அடித்துவிட்டோம் எப்படியும் வெற்றி உறுதி என பந்துவீச வந்த டெல்லி அணிக்கு, தொடக்க வீரர்களாக களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸின் பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவரும் மிருகத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடி வெளுத்துவிட்டனர். ஒரு ஓவருக்கு இரண்டு, மூன்று சிக்சர்களை பறக்கவிட்ட இந்த ஜோடி 6 ஓவரில் விக்கெட்டே இழக்காமல் 116 ரன்கள் குவித்தது.

பிரியான்ஸ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங்
பிரியான்ஸ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங்

6வது ஓவரில் 6 பந்திலும் பவுண்டரிகளாக விரட்டிய பிரப்சிம்ரன் சிங் 18 பந்தில் அரைசதமடிக்க, பவர்பிளேவிலெயே நல்ல ரன்களை செட்செய்துவிட்ட இந்த ஜோடி, பஞ்சாப் கிங்ஸுற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் பந்துவீச்சில் மீண்டுவந்த டெல்லி அணி அடுத்தடுத்த ஒவர்களில் பிரியான்ஸ் ஆர்யாவை 43 ரன்னிலும், பிரப்சிம்ரனை 76 ரன்னிலும், கூப்பர் கானலியை 17 ரன்னிலும் வெளியேற்றி கம்பேக் கொடுத்தது.

கருண் நாயர் கேட்ச்
கருண் நாயர் கேட்ச்

இதற்குபிறகு டெல்லி அணியின் பக்கமே வெற்றிசேரும் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது, இன்ஃபார்மில் இருந்துவரும் ஸ்ரேயாஸ் ஐயரின் கேட்ச்சை இரண்டுமுறை கோட்டைவிட்ட கருண் நாயர் பஞ்சாப் அணிக்கு வெற்றிபெறுவதற்கான வழியை ஏற்படுத்தி கொடுத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் 7 சிக்சர்களையும், 3 பவுண்டரிகளையும் பறக்கவிட்டு 36 பந்தில் 71 ரன்கள் அடித்து பஞ்சாப் கிங்ஸை வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்றார். 265 ரன்கள் என்ற இமாலய டோட்டலை 7 பந்துகள் வெளியில் வைத்து எட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை சேஸ்செய்த அணியாக பிரமாண்ட சாதனை படைத்தது.

ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர்

7 போட்டிகளின் முடிவில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் 2.O பஞ்சாப் கிங்ஸாக களமிறங்கியிருக்கும் இந்த அணியை யார் தோற்கடிப்பார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

ஸ்ரேயாஸ் ஐயர் - கருண் நாயர்
’கிட்டவே நெருங்க முடியாது..’ உலகின் முதல் வீரர் கோலி.. ஒரே போட்டியில் இத்தனை சாதனையா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com