2025 சாம்பியன்ஸ் டிராபி
2025 சாம்பியன்ஸ் டிராபிicc

2025 சாம்பியன்ஸ் டிராபி| அதிக ரன்கள்? அதிக விக்.? அதிகபட்ச ஸ்கோர்? பரிசுத் தொகை? முழு விவரம்!

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பை வென்றது. இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் குறித்த முழு பட்டியலை தெரிந்து கொள்ளலாம்..

1. அதிக ரன்கள் - 263 ரன்கள்

ரச்சின்
ரச்சின்

2025 சாம்பியன்ஸ் டிராபி முழுவதும் அச்சுறுத்தும் பேட்ஸ்மேனாக சிறந்த ஃபார்மில் ஜொலித்த நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா, 4 போட்டிகளில் 65.75 சராசரியுடன் 2 சதங்கள் உட்பட 263 ரன்கள் குவித்தார்.

2. அதிக விக்கெட்டுகள் - 10

Matt Henry
Matt HenryR Senthil Kumar

டிம் சவுத்தீ, டிரெண்ட் போல்ட் போன்ற நட்சத்திர பவுலர்கள் இல்லாத சூழலில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை வழிநடத்திய மேட் ஹென்றி, தன்னுடைய தரமான பந்துவீச்சின் மூலம் 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இறுதிப்போட்டியில் காயத்தால் அவரால் விளையாட முடியாமல் போனது வருத்தமானது.

3. அதிகபட்ச ஸ்கோர் - 177 ரன்கள்

இப்ராஹிம்
இப்ராஹிம்pt web

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரான 145 ரன்கள் சாதனையை முறியடித்து, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 177 ரன்கள் அடித்தார் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜத்ரான். 12 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 146 பந்துகளில் 177 ரன்கள் குவித்தார்.

அதேபோல மற்றொரு அதிகபட்ச ஸ்கோராக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 165 ரன்களை அடித்தார் பென் டக்கெட்.

4. ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் - மேட் ஹென்றி, வருண் சக்கரவர்த்தி

வருண் சக்கரவர்த்தி
வருண் சக்கரவர்த்தி

2025 சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டு சிறந்த பந்துவீச்சாளர்கள் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 42 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மேட் ஹென்றி மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் சரிசமமான பந்துவீச்சை பதிவுசெய்துள்ளனர்.

அதேபோல முகமது ஷமி மற்றும் அஸ்மதுல்லா ஓமர்சாய் இருவரும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

5. அதிகபட்ச டோட்டல் - 362 ரன்கள்

நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா
நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச டோட்டலாக 362 ரன்களை குவித்து மிரட்டியது. ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் சதமடித்து அசத்தினர்.

அதே போல இங்கிலாந்து அணி 351 ரன்களும், ஆஸ்திரேலியா அணி அதை சேஸ்செய்து 356 ரன்களும் அதிகபட்ச ரன் குவிப்பாக அடித்து அசத்தின.

6. குறைவான டோட்டல் - 179 ரன்கள்

தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து
தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்துcricinfo

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் மோசமாக விளையாடிய இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

7. அதிக கேட்சுகள் - 7

virat kohli
virat kohliweb

2025 சாம்பியன்ஸ் டிராபியில் சிறந்த கிரவுண்ட் ஃபீல்டிங்கை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் மற்றும் விராட் கோலி இருவரும் 7 கேட்ச்களை பிடித்து அசத்தினர்.

8. சிறந்த பேட்டிங் சராசரி - கேஎல் ராகுல்

kl rahul
kl rahul

4 இன்னிங்ஸில் பேட்டிங் செய்த கேஎல் ராகுல் 3 நாட் அவுட் ஆட்டங்களுடன் 140 ரன்கள் அடித்து 140 சராசரியுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

9. சிறந்த பந்துவீச்சு சராசரி - வருண் சக்கரவர்த்தி

varun chakravarthy
varun chakravarthy

3 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகள் உட்பட மொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி 15.11 சராசரியுடன் மேட் ஹென்றியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

10. சிறந்த எகானமி - அப்ரார் அகமது

அப்ரார் அகமது
அப்ரார் அகமது

பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் அகமது 2 போட்டிகளில் 20 ஓவர்களை வீசியதுடன் 3.75 எகானமியுடன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டாவது இடத்தில் இந்தியாவின் ஹர்சித் ரானா இடம்பிடித்துள்ளார்.

11. தொடர் நாயகன் - ரச்சின் ரவீந்திரா

ரச்சின் ரவிந்திரா
ரச்சின் ரவிந்திரா

நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா 4 போட்டிகளில் 65.75 சராசரியுடன் 2 சதங்கள் உட்பட 263 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

12. அதிக சாம்பியன்ஸ் டிராபி வென்ற அணியாக மாறிய இந்தியா!

2025 சாம்பியன்ஸ் டிராபி
2025 சாம்பியன்ஸ் டிராபி

3வது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி, 2 கோப்பைகளுடன் சமமாக இருந்த ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி அதிக கோப்பைகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.

13. பரிசுத் தொகை என்ன?

2025 சாம்பியன்ஸ் டிராபி
2025 சாம்பியன்ஸ் டிராபிICC

2025 சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு 19.45 கோடி ரூபாயும், ரன்னராக முடித்த நியூசிலாந்துக்கு 9.72 கோடி ரூபாயும் இந்திய மதிப்பில் வழங்கப்படும்.

அதேபோல அரையிறுதியில் தோற்ற அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு தலா 4.86 கோடியும் வழங்கப்படும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com