“இந்திய அணிக்கு ஆதரவாக என்றும் இருப்போம்” - பிரதமர் மோடி

“இந்திய கிரிக்கெட் அணிக்கு இன்றும் என்றும் நாடு ஆதரவாக இருக்கும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடிமுகநூல்

இந்திய கிரிக்கெட் அணிக்கு இன்றும் என்றும் நாடு ஆதரவாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் .

எக்ஸ் சமூக தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இறுதிப்போட்டியில் தோல்வியுற்றாலும் இத்தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக விளையாடியது இந்திய அணி.

pm modi
pm modipt desk

இந்திய வீரர்கள் திறமையான ஆட்டம் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்தனர். சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று பிரதமர் தனது பாராட்டுகளை மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
உலகக்கோப்பை 2023: வெற்றி கைநழுவிப் போனது எப்படி..? இந்தியா தோற்றதற்கு மிக முக்கிய 5 காரணங்கள்!

சிறப்பாக ஆடி சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியை பாராட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், “அரையிறுதி வரை ஒரு போட்டியில்கூட தோற்காமல் சிறப்பாக ஆடிய இந்திய அணியை பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகளை
தெரிவித்துள்ளது. இறுதிப்போட்டியில் தோல்வியுற்ற போதும் தொடர் முழுவதும் பெற்ற வெற்றிகளை மறைந்துவிடாது என அக்கட்சி தெரிவித்துள்ளது. ஒவ்வொரு இந்தியரும் இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் பெருமிதம் கொள்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கும் காங்கிரஸ் கட்சி பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com