’2 கோப்பை வென்ற போதும் பறிபோன கேப்டன்சி’.. SRH புதிய கேப்டனாக கம்மின்ஸ் நியமனம்! மார்க்ரம் நீக்கம்!

2024 ஐபிஎல் தொடரில் கோப்பையை குறிவைத்திருக்கும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி, இந்திய மண்ணில் ஒருநாள் உலகக்கோப்பை வென்றவரான பாட் கம்மின்ஸை புதிய கேப்டனாக நியமித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மார்க்ரம் - கம்மின்ஸ்
மார்க்ரம் - கம்மின்ஸ்X

2024 ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் 22ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவிருக்கிறது. நடந்துமுடிந்த 2024 ஐபிஎல் ஏலத்தில் அவரவர்களுடைய அணியை பலப்படுத்தியிருக்கும் உரிமையாளர்கள், உலகத்தின் மிகப்பெரிய டி20 லீக் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் தயாராகி வருகின்றனர்.

ஒரு பக்கம் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடருக்கு முந்தைய பயிற்சி முகாமில் இணைந்துள்ளது, மறுபக்கம் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பைக்காக முதல் ஐபிஎல் கோப்பையை வெல்வதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இன்னொரு பக்கம் ஆர்சிபி அணியின் வீரர்கள் க்ளென் மேக்ஸ்வெல், காம்ரான் க்ரீன், ரஜத் பட்டிதார் முதலிய மிடில் ஆர்டர் வீரர்கள் ரன்களை குவித்துவருகின்றனர். இப்படி ஒவ்வொரு பக்கமும் அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களுடைய ஐபிஎல் பயணத்தை தற்போதே தொடங்கியுள்ளன.

pat cummins
pat cummins

இந்நிலையில்தான் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியும் தங்களுடைய இரண்டாவது கோப்பைக்காக அணியை தயார்படுத்திவருகிறது. அதன் பெரிய முன்னேற்றமாக இந்திய மண்ணில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை தட்டிச்சென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸை புதிய கேப்டனாக நியமித்துள்ளது சன்ரைசர்ஸ் அணி.

அடுத்தடுத்து இரண்டு SA20 கோப்பை வென்ற மார்க்ரம்!

தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி நிர்வாகத்தின் மற்றொரு அணியான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை தொடர்ச்சியாக 2 கோப்பைகளுக்கு அழைத்துச்சென்ற கேப்டன் எய்டன் மார்க்ரம் ஒரு சிறந்த டி20 கேப்டனாக தன்னை நிலைநிறுத்தினார். லீக்கின் முதலிரண்டு கோப்பையையும் வென்ற பிறகு அதிகமான சந்தோசத்தில் இருந்த காவ்யா மாறனின் புகைப்படம் வைரலாகியது.

மார்க்ரம்
மார்க்ரம்

இந்நிலையில் தான் மார்க்ரமின் கேப்டன்சி பதவி ஐபிஎல் தொடரில் நீக்கப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரில் மார்கரமின் கேப்டன்சி சுமாராக இருந்ததால் மாற்றப்பட்டதா அல்லது இந்திய மண்ணில் வைத்து இந்தியாவையே வீழ்த்தி கோப்பை வென்றதால் பாட் கம்மின்ஸுக்கு கொடுக்கப்பட்டதா தெரியவில்லை, மார்க்ரம் இடமிருந்து தற்போது அதிகாரப்பூர்வமாக கேப்டன் பொறுப்பு பாட் கம்மின்ஸ் இடம் சென்றுள்ளது.

தங்களுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத்தின் புதிய கேப்டன் பாட் கம்மின்ஸ்” என அறிவிக்கப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக நியூசிலாந்தின் டேனியல் விட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஆஸ்திரேலியா அணியில் பாட் கம்மின்ஸ் உடன் சேர்ந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

மார்க்ரம்
மார்க்ரம்

எப்படியிருப்பினும் 2023 உலகக்கோப்பையில் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருந்த மார்க்ரம், தென்னாப்பிரிக்கா டி20 தொடரிலும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஒரு பேட்ஸ்மேனாக நல்ல ஐபிஎல் தொடரை மார்க்ரம் இடமிருந்து எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com