Pakistan won first match Vs Netherlands T20 World Cup 2026
pakistanx page

T20 WC | முதல் போட்டியிலேயே நெதர்லாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்!

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி, தன்னுடைய முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
Published on

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி, தன்னுடைய முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலககோப்பையின் 10ஆவது சீசன் இன்று தொடங்கியது. மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரில், 20 அணிகளும் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகியா அணிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இந்த தொடரின் முதல் போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் அணி, நெதர்லாந்தை பேட் செய்ய பணித்தது. அதன்படி, முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி, 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 37 ரன்களும், பேஸ் டி லீடே 30 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்ஷா 3 விக்கெட்களையும், அகமது, நவாஸ், அயூப் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Pakistan won first match Vs Netherlands T20 World Cup 2026
ned Vs pakx page

பின்னர், 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரர் ஷகீப்ஷடா ஃபர்ஹான் 47 ரன்களும், சயீம் அயூப் 24 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். ஆனாலும் பின்னர் வந்த வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால், முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணி தோல்வியைச் சந்திக்குமா என்ற கேள்வி உருவானது. எனினும், ஃபஹீம் அஷ்ரப் கடைசிக் கட்டத்தில் அதிரடியாய் ஆடி பாகிஸ்தான் அணியை வெற்றிபெற வைத்தார். அவ்வணி இறுதியில் 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஃபஹீம் 11 பந்துகளில் 29* ரன்கள் எடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் தொடக்கப் போட்டியிலேயே வெற்றிபெற்றுள்ளது.

Pakistan won first match Vs Netherlands T20 World Cup 2026
T20 WC | இந்தியாவுடன் புறக்கணிப்பு.. மீண்டும் உறுதிப்படுத்திய பாகி. பிரதமர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com