AsiaCup: Ind Vs Pak... ”நாளை இந்தியாவை வீழ்த்துவோம்” - காரணம் சொன்ன பாபர் அசாம்!

நாளை நடைபெறும் போட்டியில், இந்தியாவை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
ரோகித்-பாபர் அசாம்
ரோகித்-பாபர் அசாம்File image

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் , சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை (செப்.10) மோதுகின்றன. காயத்தில் இருந்து மீண்ட ராகுல் , தனிபட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பிய பும்ரா, தற்போது அணியுடன் இணைந்திருப்பது கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. ஆசியக் கோப்பையில் குரூப் ஆட்டங்கள் நிறைவுபெற்ற நிலையில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

முன்னதாக குரூப் சுற்றில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அந்த போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஷாஹீன் அப்ரிடி, நஸீம் ஷா, ஹாரிஸ் ராஃப் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களை தங்களது வேகத்தால் திணறடித்தனர். எனினும் ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷனின் அரைசதங்கள் இந்தியாவை சரிவில் இருந்து மீட்டது. பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், ஏறக்குறைய இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். எனவே அந்த அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்

குரூப் ஆட்டத்தில் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்த இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோகித், கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுக்கு கடும் சவால் அளிக்க முடியும். இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்படலாம். காயத்தில் இருந்து மீண்ட கே.எல்.ராகுல், இஷான் கிஷனுக்கு பதிலாக களமிறங்க உள்ளார். அதேநேரத்தில் சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பிய பும்ரா, மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார். கொழும்பு பிரேமதாஸா மைதானத்தில் , மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. மழையின் இடையூறு இருந்தாலும் ரிஸர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளதால், போட்டியை மிகுந்த ஆவலுடன் ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

babar azam
babar azamtwitter

என்றாலும், இந்தியாவை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”தொடர்ச்சியாக இலங்கையில் விளையாடி வருவதால் இந்தியாவை நாங்கள் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். நாங்கள் புதிய பந்தில் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெறுகிறோம் மற்றும் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவதே எங்களது திட்டம். மிடில் ஓவர்களில் எங்களுக்கு விக்கெட்டுகள் தேவை. ஆனால் நாங்கள் அவற்றைப் பெறவில்லை. மிடில் ஓவர்களில் சொதப்பினாலும் போட்டியை நன்றாக முடிப்பதை நீங்கள் காணலாம். எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் இறுதியில் சிறப்பாக செயல்படுகின்றனர். இது ஒரு அணியின் கூட்டு முயற்சி. போட்டியில் யாராவது தோல்வியுற்றால், மற்றொரு பந்து வீச்சாளர் அதை சரி செய்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com