காயத்தால் அவதி... இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ரவுஃப் விளையாடுவாரா?

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹரிஸ் ரவுஃப் வரும் 11 ஆம் தேதி நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
Haris Rauf
Haris Raufpt desk

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மிக மிக முக்கியமாக கருதப்படுகிறது. இந்நிலையில், பாக் வீரர் ரவுஃப்புக்கு ஏற்பட்ட காயம் தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை வந்த பிறகே அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பது தெரியவரும்.

Haris Rauf
Haris Raufpt desk

ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா, ஹசன் அலி ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், ஹரிஸ் ரவுஃப் காயமடைந்திருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Haris Rauf
146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த மேத்யூஸ்! Timed Out - விதி என்ன?

பெங்களூருவில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் போது ஹரிஸ் ரவுஃப்-க்கு காயம் ஏற்பட்டது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரவுஃப் 13 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com