ஜெய்ஸ்ரீராம் சர்ச்சை: ஐ.சி.சி-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்களை பார்த்து ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டப்பட்டது தொடர்பாக, ஐ.சி.சி-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்கோப்புப் படம்

குஜராத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் கடந்த 14 ஆம் தேதி, நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியது. அந்த போட்டியின்போது விக்கெட் இழந்து பெவிலியன் திரும்பிய பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து, இந்திய ரசிகர்கள் சிலர், ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

Ind vs Pak
Ind vs PakTwitter

இது தொடர்பாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது. அதோடு, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ள பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகளை தாமதப்படுத்துவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com