கிரிக்கெட்டின் ஆன்மாவை வெளிப்படுத்திய லெஜெண்ட்ஸ்! கோலி கையெழுத்திட்ட ஜெர்சியை பெற்ற பாக். கேப்டன்!

இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் பெரிய மோதலுக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், விராட் கோலியிடம் இருந்து அவருடைய ஜெர்சியை பரிசாக பெற்றார்.
பாபர் - கோலி
பாபர் - கோலிTwitter

இந்தியா-பாகிஸ்தான் இரண்டு அணிகளுக்கு இடையேயான மோதல் என்பது எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு, உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் தான் நடக்கப்போகிறது என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே அதிகமாகவே இருந்தது. ஏனென்றால் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆசியக்கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு வந்து விளையாட மறுப்பு தெரிவித்தது இந்திய நிர்வாகம். அதனை தொடர்ந்து பாகிஸ்தானும் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றால் வரமாட்டோம் என தடாலடியாக மறுப்பு தெரிவித்தது.

Ind vs Pak
Ind vs PakTwitter

பின்னர் பிசிசிஐக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படாமல், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் பகுதிவாரியாக நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஐசிசியின் அழுத்தத்தின் காரணமாக பாகிஸ்தான் உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு வந்து விளையாடவும் ஒப்புக்கொண்டது. ஆனாலும் எங்களுக்கு பாதுகாப்பு அச்சம் உள்ளது என்று அழுத்தமாகவும் தெரிவித்தது.

ஆனால் இதற்கிடையில் பாகிஸ்தான் - இந்தியா மோதும் போட்டி இந்தியாவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளின் காரணமாக பாதுகாப்பு அச்சத்தால் தேதி மாற்றிவைக்கப்பட்டது. அப்போது இந்தியா வந்து விளையாடுவதற்கு மேலும் அச்சம் தெரிவித்தது பாகிஸ்தான் நிர்வாகம். எங்களுக்கு இந்தியா வருவதற்கு பிரச்சனை இல்லை முடிந்தால் போட்டியை அஹமதாபாத்தில் இல்லாமல், சென்னை அல்லது கொல்கத்தாவில் வையுங்கள் என்ற கோரிக்கையையும் விடுத்தது.

ind vs pak
ind vs pak

மேலும் இந்தியாவிற்கு வர ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அணிக்கு அவ்வளவு எளிதாக அணிக்கு விசா வழங்கப்படவில்லை. இரண்டு நாட்கள் காத்திருப்புக்கு பின் கடைசி அணியாக தான் பாகிஸ்தான் இந்தியா வந்தது. தொடர்ந்து பாகிஸ்தான் விளையாடிய பயிற்சி ஆட்டம் கூட மூடிய கதவுகளுக்கு பின்னால் தான் நடத்தப்பட்டது. இத்தகைய வெறுப்பு பிரச்சாரங்களுக்கு இடையில் தான் பாகிஸ்தானுக்கு தகுந்த மரியாதை அளிக்கும் விதமாக, அந்த அணியை வரவேற்பதிலும், தங்க வைப்பதிலும் அதிகப்படியான கவனம் செலுத்தியது பிசிசிஐ. இத்தகைய பிசிசிஐ-ன் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும், பிசிசிஐ பாகிஸ்தானுக்கான முக்கியத்துவத்தை கடைசிவரை ஒருபடி அதிகமாகவே வைத்திருந்தது.

kohli - babar
kohli - babar

இந்நிலையில் தான் இந்தியா-பாகிஸ்தான் முரன்பாடுகளுக்கு இடையே பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் விராட் கோலி இருவரும் கிரிக்கெட் விளையாட்டின் உண்மையான ஆன்மாவை வெளிப்படுத்தும் விதமாக செயல்பட்டது அதிகமாக பாராட்டப்பட்டு வருகிறது.

கோலியிடம் கையெழுத்திட்ட ஜெர்சியை கேட்ட பாபர் அசாம்!

எதிரணி வீரர்களையும் அதிகம் மதிக்கும் விராட் கோலி, இதற்கு முன்னர் பல்வேறு பாகிஸ்தான் வீரர்களுக்கு அவர் பயன்படுத்திய விளையாட்டு பொருட்களையும், பேட் மற்றும் ஜெர்சியையும் வழங்கியுள்ளார். இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதலுக்கு பின் தோல்வியை சந்தித்து இருந்தாலும் கிரிக்கெட்டின் ஆன்மாவை வெளிப்படுத்தும் விதமாக பாபர் அசாம் நடந்துகொண்டதும், அதற்கு கோலி ரியாக்ட் செய்ததும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

போட்டி முடிந்த பிறகு வீரர்கள் கைக்குலுக்கும் போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், விராட் கோலியிடம் சென்று எதையோ கேட்டுக்கொண்டிருந்தார். கோலியும் எடுத்துதருவதாக கூறிவிட்டு அடுத்த வீரர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் கோலியை அழைத்த பாபர் அசாமிடம், டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கிறது நான் கொண்டுவருகிறேன் என பதிலளித்தார் கிங் கோலி. இவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருக்க, விராட் கோலி தன்னுடைய ஜெர்சியை கொண்டுவந்தார். அதில் ஒரு ஃபேன் பாயாக கையெழுத்திட சொன்ன பாபர் அசாம், கோலியை சைன் போட சொல்லி ஜெர்சியை பெற்றுக்கொண்டார். பின்னர் இருவரும் சிரித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

போட்டியின் போதும், போட்டிக்கு பிறகான போதும் இந்திய ரசிகர்களின் அணுகுமுறை விமர்சனத்திற்குள்ளாகி பேசுபொருளாக இருந்துவரும் நிலையில், இந்த இரண்டு வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் மரியாதை அளிக்கும் நிமித்தமாக நடந்துகொண்டது பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டுவருகிறது. இதுதான் உண்மையான கிரிக்கெட், ரசிகர்களும் கோலி-பாபரை போன்று கிரிக்கெட்டை பார்க்கவேண்டும் என்பதே உண்மையான கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக இருந்துவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com