india teampt desk
கிரிக்கெட்
ஒருநாள் உலகக் கோப்பை தொடர்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
ஒருநாள் உலகக் கோப்பை தொடர் ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பை தொடர் போட்டிகள் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை மொத்தம் 45 நாட்கள் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
India Cricket TeamFile Image
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில், விராட் கோலி, ஜஸ்பரீத் பும்ரா, ஹார்திக் பாண்டியா, சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாகூர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட 15 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
15 பேர் கொண்ட பலம் வாய்ந்த இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை உலகக் கோப்பை இந்திய அணியே தட்டித்தூக்கும் என ரசிகர்கள் உற்சாகத்தோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.