நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி மழையால் ரத்து
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி மழையால் ரத்துPt web

T20 WC | நியூசிலாந்து Vs பாகிஸ்தான்.. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி மழையால் ரத்து!

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
Published on

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வரும் நிலையில், லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.

நியூசிலாந்து - பாகிஸ்தான்
நியூசிலாந்து - பாகிஸ்தான்Pt web

இந்த நிலையில், இன்று முதல் சூப்பர் 8 சுற்றுகள் தொடங்குகிறது. அதன்படி, இச்சுற்றின் முதல் போட்டி நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொழும்புவில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஏற்கனவே மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்ட நிலையில், லேசான தூரலுடனேயே டாஸ் போடப்பட்டது. அப்போது, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தால், போட்டி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மழை நின்ற பிறகு போட்டி தொடங்கும் என மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இரண்டரை மணி நேரத்திற்கு மேல் மழை பெய்து கொண்டிருந்ததால், நடுவர்கள் போட்டி கைவிடுவதாக அறிவித்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு தலா 1 புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து, நாளை சூப்பர் 8 சுற்றில் இரண்டு போட்டிகள் நடக்கவுள்ளன. அதன்படி, முதல் போட்டி இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி மழையால் ரத்து
”கடைசி 15 மாதம் கடினம்” - மனைவியை விவாகரத்து செய்த CSK வீரர்.. ராகுல் சஹார் யார்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com