SA vs NZ
SA vs NZpt

CT 2025 | தென்னாப்பிரிக்காவுக்கு மற்றொரு தோல்வி.. ஃபைனலில் இந்தியாவை எதிர்கொள்கிறது நியூசிலாந்து!

2025 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியை சந்தித்துள்ளது தென்னாப்பிரிக்கா அணி.
Published on

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது அரையிறுதிப் போட்டிகளை எட்டிய நிலையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தின.

ind vs nz
ind vs nz

துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது அரையிறுதிப்போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

அரையிறுதியில் நியூசிலாந்து வெற்றி..

பாகிஸ்தானில் உள்ள லாகூர் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 108 ரன்கள் குவித்து அசத்த, நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் 102 ரன்கள் அடித்து மிரட்டிவிட்டார். கடைசியாக வந்து அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செல் மற்றும் பிலிப்ஸ் இருவரும் தலா 49 ரன்கள் அடிக்க 362 ரன்கள் என்ற இமாலய ரன்களை குவித்தது நியூசிலாந்து.

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே அதிகபட்ச டோட்டலை பதிவுசெய்த நியூசிலாந்து, இதற்கு முந்தைய ஆஸ்திரேலியாவின் 356 ரன்கள் சாதனையை முறியடித்தது.

நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா
நியூசிலாந்து - தென்னாப்பிரிக்காpt

363 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாகவே தொடங்கியது. கேப்டன் டெம்பா பவுமா மற்றும் வேன் டர் டஸ்ஸென் இருவருக்கும் நல்ல தொடக்கம் கிடைத்த போதும், பெரிய ரன்களாக மாற்ற முடியாமல் 56 ரன்கள் மற்றும் 69 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.

தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா

அடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நியூசிலாந்து ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளாக வீழ்த்தி மிரட்டிவிட்டனர். கடைசிவரை தனியொரு ஆளாக டேவிட் மில்லர் சதமடித்து போராடினாலும் தென்னாப்பிரிக்கா அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்ல முடியவில்லை. 50 ஓவர் முடிவில் 312/9 ரன்கள் மட்டுமே எடுத்த தென்னாப்பிரிக்கா 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நியூசிலாந்து
நியூசிலாந்து

தென்னாப்பிரிக்காவை அரையிறுதியில் வீழ்த்திய நியூசிலாந்து அணி, ஞாயிற்று கிழமை நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com