\
ICC T20 WC 2026
ICC T20 WC 2026icc

டி20 உலகக்கோப்பை| நமீபியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது நெதர்லாந்து!

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் நமீபியாவை தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றது நெதர்லாந்து அணி.
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பையில் நமீபியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அசத்தலான வெற்றியை பெற்றது. பாஸ் டி லீடே 72 ரன்கள் அடித்து முக்கிய பங்கு வகித்தார். இந்த வெற்றியால் நெதர்லாந்து குரூப் ஏ-ல் இந்தியாவிற்கு பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளது.

2026 டி20 உலகக்கோப்பை தொடரானது கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஒரு கோப்பைக்காக 20 அணிகள் பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், ஒவ்வொரு ஆட்டமும் சுவாரசியம் பெற்றுவருகிறது.

டி20 உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பைx

அமெரிக்கா, நேபாள், யுஏஇ போன்ற அணிகள் சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில், பெரிய அப்செட்டை இந்த உலகக்கோப்பை காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் டெஸ்ட் விளையாடும் நாடுகள் மட்டுமில்லாமல் துணை நாடுகள் என அனைத்து அணிகளும் பல சாதனைகளை முறியடித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற நமீபியா-நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நெதர்லாந்து அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.

ICC T20 WC 2026
’இந்திய வீரர்களுக்கு திறமை இல்லை; அவர்கள் BAT-ல் ரப்பர் உள்ளது’ - இலங்கை வீரர் குற்றச்சாட்டு

7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..

டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் குவித்தது.

நமீபியா
நமீபியா

தொடர்ந்து விளையாடிய நெதர்லாந்து அணியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய பாஸ் டி லீடே 48 பந்தில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என துவம்சம் செய்து 72 ரன்கள் அடித்து அசத்தினார். லீடேவின் அதிரடியால் 18 ஓவர் முடிவில் வெற்றி இலக்கை எட்டிய நெதர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பாஸ் டி லீடே
பாஸ் டி லீடே

குரூப் ஏ-ல் இடம்பெற்றிருக்கும் நெதர்லாந்து ஒரு வெற்றி ஒரு தோல்வி என இந்தியாவிற்கு பிறகு இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

ICC T20 WC 2026
NZ vs UAE| அதிக டி20 சிக்சர்கள்.. ரோகித் உலக சாதனையை நெருங்கும் UAE வீரர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com