Sandeep Lamichhane
Sandeep LamichhaneIPL

இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் நேபாள் முன்னாள் வீரர் குற்றவாளி - நீதிமன்றம் அறிவிப்பு

இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் டெல்லி கேபிடல்ஸ் வீரரும், நேபாள் அணியின் முன்னாள் கேப்டனுமான சந்தீப் லாமிச்சனேவை குற்றவாளி என உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்.
Published on

நேபாளத்தின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானேவை பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் டிசம்பர் 29 வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பளித்துள்ளது.

Sandeep Lamichhane
Sandeep Lamichhane

நேபாள் அணியின் முன்னாள் கேப்டனும், லெக் ஸ்பின்னருமான சந்தீப், 51 ஒருநாள் போட்டிகளிலும், 52 டி20 போட்டிகளிலும், 9 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் 6/11, டி20 போட்டியில் 5/9 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் 3/36 என சிறந்த பந்துவீச்சை வைத்திருக்கும் சந்தீப் லமிச்சனே மொத்தமாக 210 இண்டர்நேசனல் விக்கெட்டுகளையும், 13 ஐபிஎல் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 2018ஆம் ஆண்டு விளையாடினார்.

17 வயது மைனர் பெண்ணை வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டு!

23 வயதான சந்தீப் லமிச்சனே கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காத்மாண்டுவில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து 17 வயது மைனர் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டப்பட்டார். வழக்கு நடைபெற்ற நிலையிலும், ஜனவரி மாதம் நேபாள உச்சநீதிமன்றம் சந்தீப்பின் காவலை தளர்த்தியதால் அவர் நேபாள் அணியில் தொடர்ந்து விளையாடினார். இந்நிலையில் தற்போது சந்தீப் லமிச்சனேவை குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது காத்மண்டு மாவட்ட நீதிமன்றம்.

Sandeep Lamichhane
Sandeep Lamichhane

வெள்ளிக்கிழமையான இன்று வழக்கின் விசாரணையில், காத்பண்டு மாவட்ட நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி ஷிஷிர் ராஜ் தாகல் லாமிச்சானே மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்தார். இருப்பினும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டவர் மைனர் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தண்டனை தொடர்பான விசாரணை அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com