நாதன் லயன் - க்ளென் மெக்ராத்
நாதன் லயன் - க்ளென் மெக்ராத்web

தகர்ந்தது ஜாம்பவான் மெக்ராத்தின் சாதனை.. வரலாறு படைத்தார் நாதன் லயன்!

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
Published on
Summary

ஆஸ்திரேலியாவின் நாதன் லயன், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் 564 விக்கெட்டுகளை வீழ்த்தி, மெக்ராத்தின் சாதனையை முறியடித்தார்.

ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியில் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதியில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் நாதன் லியன். ஆட்டத்தில் முதல் பந்திலேயே குமார் சங்ககாரா விக்கெட்டை கைப்பற்றி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றில் முதல் பந்தில் விக்கெட் எடுத்த மூன்றாவது பந்துவீச்சாளராக மாறினார். அதன்பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியா இடதுகை ஸ்பின்னர்களில் சிறந்தவராக மாறினார்.

nathan lyon
nathan lyon

இந்தசூழலில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளார் நாதன்.

நாதன் லயன் - க்ளென் மெக்ராத்
’ஆல்டைம் கிரேட்டஸ்ட்’ இடதுகை TEST பவுலர்கள்.. டாப் 7-ல் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர்!

மெக்ராத்தை பின்னுக்கு தள்ளிய லயன்..

சமீபத்தில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் பங்கேற்ற அவர் இரண்டாம் போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அவர், இரண்டாவது இன்னிங்ஸ் இங்கிலாந்து வீரர்கள் பென் டக்கட் மற்றும் ஒல்லி போப் இரண்டு பேரின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

நாதன் லயன்
நாதன் லயன்

இதன்மூலம் 564 விக்கெட்டுகளுக்கு சென்ற அவர், ஆஸ்திரேலியாவிற்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது பந்துவீச்சாளராக மாறி சாதனை படைத்தார். 563 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்த மெக்ராத்தை பின்னுக்குதள்ளினார். முதலிடத்தில் ஜாம்பவான் ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். மேலும் ஆஸ்திரேலியா ஆப் ஸ்பின்னர்களில் அதிக விக்கெட் எடுத்தவர்களில் முதலிடத்தில் உள்ளார் நாதன் லயன்.

நாதன் லயன் - க்ளென் மெக்ராத்
Rewind 2025| டென்னிஸ் முதல் செஸ் வரை.. உலக விளையாட்டில் 8 தமிழக வீரர்கள் ஆதிக்கம்!

புதிய இலக்கு

நாதன் லயன்
நாதன் லயன்

ஆஸ்திரேலியா ஆப் ஸ்பின்னரான நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்களை எடுப்பது தான் அடுத்த இலக்கு என கூறியுள்ளார்.

செய்தியாளர் - சு.மாதவன்

நாதன் லயன் - க்ளென் மெக்ராத்
’இஷான் கிஷன் ஹீரோ..’ 19 வருட SMAT வரலாற்றில் முதல் கோப்பை வென்றது ஜார்கண்ட்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com