“ரசிகர் உருவாக்கிய Photo-க்கு உயிர் கொடுத்த தோனி” - இதுக்கு தான் இவர கொண்டாடுறாங்க! சுவாரஸ்ய பின்னணி

ஒருமுறை ரசிகர் ஒருவர் உருவாக்கிய நீளமான ஹேர்ஸ்டைல் உடைய போட்டோவை தோனி என்னிடம் காமித்தார், நாங்கள் அதை மெய்யாக்கும் முயற்சியில் இறங்கலாம் என முடிவு செய்தோம் - பிரபல ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீம்
MS Dhoni
MS DhoniTwitter

புதிய ஹேர்ஸ்டைலோடு தோனி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை உலுக்கி வருகின்றன. பிரபல சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம் தனது சமூக வலைதள பங்கங்களில் தோனியின் புதிய புகைப்படங்களை வரிசையாக பதிவிட்டதை தொடர்ந்து, ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். அதிலும் எதனால் இந்த ஹேர்ஸ்டைல் உருவாக்கப்பட்டது என்ற காரணம் தான் தோனியின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.

இன்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகைத்தை மறைத்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார், பிரபல சிகை அலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம். அவர் பதிவிட்டிருந்த அந்த பதிவில் “இது யாரென கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். யார் என தெரிந்துகொள்ள காலை 11.11 மணிவரை காத்திருங்கள்” என பதிவிட்டிருந்தார். பல ரசிகர்கள் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே “இது தல தோனி” என கமண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். பின்னர் 11 மணிக்கு புதிய ஹேர்ஸ்டைலோடு இருக்கும் தோனியின் புகைப்படத்தை பகிருந்து விட்டு அதற்கான காரணத்தையும் ஆலிம் வெளிப்படுத்தியிருந்தார். ஆலிமின் இந்த பதிவையும், தோனியின் புதிய புகைப்படத்தையும் எதிர்ப்பார்க்காத ரசிகர்கள், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனை கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர் உருவாக்கிய புகைப்படத்தை காட்டி இதை உருவாக்கலாம் என்றார்! - ஆலீம் ஹக்கீம்

காலை 11.11 மணிக்கு பதிவிட்டிருந்த பதிவில், “மகேந்திர சிங் தோனியுடன் பழகுவதற்கு படைப்பாற்றல் மிக்க எந்தவொரு நபருக்கும் அது ஒரு அற்புதமான வாய்ப்பாகவே இருக்கும். அவரது தலைமுடியை ஸ்டைலிங் செய்வதற்கான வாய்ப்பை பெற்றதற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த புதிய ஹேர்ஸ்டைலுக்கான முன்னெடுப்பு என்பது கடந்த ஐபிஎல்லில் நடந்தது.

கடந்த ஐபிஎல் தொடருக்கு முன் மற்ற வீரர்கள் அனைவரும் முடியை கூர்மையாகவும், குட்டையாகவும் வெட்டிக் கொண்டிருந்த போது, மஹி பாய் என்னிடம் ஒரு புகைப்படத்தை காட்டினார். அவரது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட அப்படத்தை என்னிடம் காட்டிய போது, நான் உண்மையில் அந்த ஹேர்ஸ்டலை ரசித்தேன். அவருக்கும் எனக்கும் இதை மெய்யாக்கும் எண்ணம் ஒன்றாக தோன்றியது. பின்னர் நாங்கள் இருவரும் அவருடைய தலைமுடி நீளமாக வளரும் வரை தொட மாட்டோம் எனும் முடிவுக்கு வந்தோம். அந்த ஹேர்ஸ்டைல் தான் தற்போது உண்மையாகியுள்ளது.

நான் எப்போதும் மஹி பாயின் நீளமான முடிக்கு பெரிய ரசிகன். அவருடைய முடிக்கு முற்றிலும் புதிய ஹேர்ஸ்டைலும், வண்ணத்தையும் உருவாக்க முடிவு செய்து உருவாக்கி உள்ளோம். மஹி பாயின் இந்த புதிய நீளமான ஹேர்ஸ்டைலை உருவாக்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தோனியை பழைய விண்டேஜ் லுக்கில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com