\
MS Dhoni Retires from IPL Cricket
MS DhoniReuters

"A once-in-a-lifetime player" ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு!!

ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெற்றார் மகேந்திர சிங் தோனி.
Published on: 

இந்திய அணிக்கான முதல் டி.20 உலகக்கோப்பையை எம்.எஸ் தோனி தலைமையில், இந்திய அணி வென்றது. அதன்பிறகு, 2011-ம் ஆண்டில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையை வென்றதன மூலம், இந்திய அணியின் 28 ஆண்டுகால கனவை மீண்டும் ஒருமுறை நிறைவேற்றினார். அந்த உலக்கோப்பையில் தோனி அடித்த கடைசி சிக்சர், இந்தியர்களின் மனதில் இன்றளவும் நீங்காமல் இருந்து வருகிறது. மேலும், அந்தப்போட்டியின், ஆட்ட நாயகனாகவும் அவரே தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, 2013 சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதன் மூலம், அனைத்து வித சர்வதேச கோப்பைகளையும் வென்ற கேப்டனாக மாறினார் தோனி.

Reuters

இதற்கிடையில், இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் என்ற 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டில் தொடங்கியது. அப்போது, சென்னை அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் எம்.எஸ். தோனி. அதன்பிறகு, சென்னை அணியின் ஒற்றை அடையாளமாகவே இருந்து வருகிறார். அவரது தலைமையிலான சென்னை அணி இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகள் வென்று ஐபிஎல் தொடரின் சிறந்த அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

இதற்கிடையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 2014-ம் ஆண்டும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து 2020-ம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். எனினும், தொடர்ந்து ஐபிஎல் தொடரில் அவர் விளையாடி வந்தது அவரின் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்து வந்தது. ஆனாலும், கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு சீசனின் போது, அவர் ஓய்வு பெறுகிறார் என்ற வதந்திகள் பரவி வந்தன. எனினும், அதற்கு மௌனம் காத்தே வந்தார் எம்.எஸ். தோனி.

ஆனால், 2024 ஐபிஎல் தொடரில் தன்னுடைய கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்த தோனி, சாதாரண ஒரு வீரராக மட்டுமே தற்போது சிஎஸ்கே அணியில் பங்கேற்று வந்தார். தொடர்ந்து, கடந்த சீசனில் எம்.எஸ். தோனி காயம் காரணமாக விளையாடவில்லை.

இந்நிலையில் தான், 2027 ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவார் என அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் 45 வயதான எம்.எஸ்.தோனி. இதுகுறித்து சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய அற்புதமான வீரர்.

ஒரு புதிய பொறுப்பு. என்றென்றும் நிலைத்திருக்கும் பந்தம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக (Team Mentor) மகேந்திர சிங் தோனி பொறுப்பேற்கிறார்!

எண்ணற்ற வெற்றிகள், சவாலான தருணங்கள் மற்றும் நம் இதயங்களில் என்றென்றும் நீங்காமல் இருக்கும் நினைவுகள் என, தொடக்கம் முதலே எங்கள் பயணத்தின் இதயமாக எம்.எஸ். தோனி இருந்து வருகிறார்.

எங்களை வெற்றியின் உச்சிக்கு அழைத்துச் சென்றது முதல், அடுத்த தலைமுறை சூப்பர் கிங்ஸ் வீரர்களை வழிநடத்துவது வரை, 'தல' எப்போதும் எங்கள் அடையாளத்தின் ஒரு அங்கமாக இருப்பார். சென்னை எப்போதும் அவருடைய சொந்த வீடாகவே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

MS Dhoni Retires from IPL Cricket
வெறும் 48 பந்தில் 135* ரன்கள்.. 281 ஸ்ட்ரைக்ரேட்! மிரட்டிய ரஜத் பட்டிதார்!