குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மேலும் ஒரு பெரிய அடி! 2024 IPL தொடரிலிருந்து விலகும் முகமது ஷமி!

2024 ஐபிஎல் தொடரிலிருந்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர பவுலர் முகமது ஷமி விலகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகமது ஷமி
முகமது ஷமிIPL

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுக அணியாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, சாம்பியன் அணிகளாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கியது. இளம் வீரர்களை கொண்ட அணியை வழிநடத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா, யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த அணி பங்கேற்ற முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பை வென்று அசத்தினார். அந்தவெற்றியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் பங்கு அதிகமாக இருந்தது,

அதனைத்தொடர்ந்து 2023 ஐபிஎல் தொடரிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, இறுதிப்போட்டியில் கடைசிபந்தில் வெற்றியை கோட்டை விட்டு ரன்னராக மாறியது. சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே 3 நாட்களாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இறுதிவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆட்டம் காட்டிய டைட்டன்ஸ் அணி, தாங்கள் ஒரு சாம்பியன் அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துகாட்டினர்.

Hardik Pandya
Hardik Pandya

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடருக்கான டிரேடிங்கில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, தானாகவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்து விலகினார். அதனால் வேறுவழியில்லாமல் அவரை ரிலீஸ் செய்த டைட்டன்ஸ் அணி, இளம்வீரர் சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்தது. ஹர்திக் பாண்டியா மும்பைக்கு சென்றதே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பெரிய பாதகமாக இருந்துவரும் நிலையில், தற்போது நட்சத்திர பவுலர் முகமது ஷமியும் 2024 ஐபிஎல் தொடரிலிருந்து விலகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகமது ஷமி
சதமடித்த போதும் ஏன் வாய்ப்பை பறித்தீர்கள் என தோனியிடம் கேட்க விரும்புகிறேன்! - ஓய்வுபெற்ற IND வீரர்

2024 ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் முகமது ஷமி!

கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முழுக்க அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போதே பந்துவீசுவதில் சிரமப்பட்டார். அதனால் தான் கடைசி நேரத்தில் கூட அவரால் பந்துவீச முடியாமல் போனது.

Mohammed Shami
Mohammed Shami Manvender Vashist Lav

பின்னர் இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய முகமது ஷமி, இங்கிலாந்தில் சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது காயம் குணமடையாத நிலையில் அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாகவும், அதனால் எதிர்வரும் 2024 ஐபிஎல் தொடரில் முகமது ஷமி பங்கேற்கமாட்டார் என்றும் பிடிஐ செய்திவெளியிட்டுள்ளது.

முகமது ஷமி
முகமது ஷமி

இதனால் டி20 உலகக்கோப்பைக்கு மட்டுமல்லாமல், அக்டோபர் நவம்பரில் நடக்கவிருக்கும் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான உள்நாட்டு தொடரிலும் ஷமி பங்கேற்பது சந்தேகமாகிவிடும். ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடருக்கு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2024 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்று மாலை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முகமது ஷமி
ரச்சினா? மார்ஸா? பறந்த 30 சிக்சர்கள்! இதுதான் ரியல் டி20! நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸி. த்ரில் வெற்றி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com