தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் முகமது ஷமி பங்கேற்பது சந்தேகம்! காரணம் இதுதான்!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
shami
shamix

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவும், ஒருநாள் அணிக்கு கேஎல் ராகுலும், டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்ற போதிலும், தென்னாப்பிரிக்காவில் மட்டும் டெஸ்ட் தொடரை இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. கடந்த 2021-2022 சுற்றுப்பயணத்தில் கூட வெற்றிபெற வேண்டிய சூழலில் இருந்து 2-1 என டெஸ்ட் தொடரை நழுவவிட்டது இந்தியா. இந்நிலையில் இந்தமுறையாவது தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றுமா என்ற எதிர்ப்பிருக்கும் நிலையில், ப்ரைம் பார்மில் இருக்கும் முகமது ஷமி விளையாடுவதில் சந்தேகம் என செய்திவெளியாகியுள்ளது.

எதனால் ஷமி பங்கேற்பதில் சிக்கல்? பிசிசிஐ சொல்வது என்ன?

நடந்து முடிந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் தன்னுடைய சிறந்த வேகப்பந்துவீச்சை (7/57) பதிவுசெய்த முகமது ஷமி, வெறும் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை (24 விக்கெட்டுகள்) கைப்பற்றிய ஒரே பந்துவீச்சாளராக மாறி அசத்தினார். தென்னாப்பிரிக்காவை அவர்கள் சொந்த மண்ணிலேயே வைத்து தோற்கடிக்க வேண்டுமானால், ஷமி போன்ற ஒரு பந்துவீச்சாளர் இந்திய அணியில் இருப்பது முக்கியமான விஷயமாகும். இந்நிலையில் தான் ஷமி டெஸ்ட் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

முகமது ஷமி
முகமது ஷமிTwitter

க்றிக்பஸ் வெளியிட்டிருக்கும் தகவலின் படி, நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரிலேயே முகமது ஷமி கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சையில் ஈடுபட்டுவரும் அவர், முழு உடற்தகுதியை எட்டவில்லை எனவும், ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

ஷமி
ஷமி

ஷமி குறித்து தெரிவித்திருக்கும் பிசிசிஐ, “ஷமி தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறார். டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன், அவருடைய உடற்தகுதியை பொறுத்தே முடிவு எட்டப்படும்” என தெரிவித்துள்ளதாக க்றிக்பஸ் கூறியுள்ளது.

Rinku Singh
Rinku Singh

தற்போது நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்று அசத்தியது. 1-0 என டி20 தொடர் முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 1-1 என இந்திய அணி சமன்செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com