“போட்டியில் டாஸ் போடுவதை ஸ்படைர் கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும்!” - பாகிஸ்தான் முன்னாள் வீரர்

கிரிக்கெட்டில் வெளிப்படைத்தன்மைக்காக டாஸ் போடுவதை ஸ்பைடர் கேமரா மூலம் எல்லோருக்கும் தெரியும்படி காட்டவேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஐசிசிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
Mohammad Hafeez
Mohammad Hafeez Twitter

உலக கிரிக்கெட் போட்டிகளில் தற்போதைய நடைமுறையின்படி, டாஸ் போடும்போது போட்டி நடுவர் மட்டுமே நாணயம் தரையில் விழுந்த பிறகு அதைப் பின்தொடர்ந்து டாஸ் முடிவை அறிவிப்பார். இந்நிலையில் இந்த நடைமுறையை கேள்விக்கேட்கும் விதமாக, “ஏன் அம்பயர் மட்டும் டாஸ் விழுவதை பார்க்கவேண்டும், மக்கள் எல்லோருக்கும் தெரியும்படி ஸ்பைடர் கேமராவில் காட்டலாமே” என ஒவ்வொரு சர்ச்சைக்குரிய போட்டியின் போதும் பெரும்பாலான ரசிகர்கள் இக்கேள்வியை எழுப்புவார்கள்.

ind vs pak
ind vs pak

டாஸ் போடுவதை வெளிப்படையாக காட்டுவதில் என்ன சிக்கல் என போட்டியின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் சில ரசிகர்களால் இந்த நடைமுறை அடிக்கடி விமர்சிக்கப்படும். இந்நிலையில் அதை ஏன் வெளிப்படையாக செய்யக்கூடாது என ஐசிசிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டனான முகமது ஹஃபீஷ்.

“நம்பகத்தன்மைக்காக டாஸ் கண்காணிக்கப்பட வேண்டும்!” - ஹஃபீஷ்

இதுகுறித்து பாகிஸ்தான் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய ஹபீஸ், “டாஸ் போடும் தற்போதையை நடைமுறையை மாற்றி, ஒவ்வொரு போட்டியின் போதும் ஸ்படைர் கேமரா மூலம் என்ன டாஸ் விழுகிறது என்பதை வெளிப்படையாக காட்ட வேண்டும். இதை நான் யார் மீதும் சந்தேகப்பட்டு கூறவில்லை, போட்டியின் வெளிப்படைத்தன்மைக்கு எந்த எதிர்கேள்வியும் எழாமல் பார்த்துக்கொள்ளவே இதை கூறுகிறேன்” என தெளிவுபடுத்தி இருக்கிறார்.

மேலும் “2012 ஆம் ஆண்டு நான் பாகிஸ்தான் கேப்டனாக இருந்த போது, ஐசிசி போட்டியை ஏற்பாடு செய்யும் இயக்குநரிடம் அப்போதே இதுகுறித்து முறையிட்டேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com