விராட் கோலி
விராட் கோலிweb

’கிங்’ என்று அழைக்கப்படுவதற்கு ’கோலி’ தான் தகுதியானவர்.. பாபர் அசாம் இல்லை! – முன்னாள் PAK கேப்டன்!

”இந்தியாவிற்காக, தனது தேசத்திற்காக வெல்வேன் என்ற எண்ணத்தோடு எப்போதும் கோலி விளையாடுகிறார்; கிங் என அழைக்கப்படுவதற்கு ஒருவர் தகுதியானவர் என்றால் அது விராட் கோலி தான், பாபர் அசாம் இல்லை” - முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்
Published on

2025 சாம்பியன்ஸ் டிராபியின் மிகப்பெரிய போட்டியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இந்தப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில், பாபர் அசாம் தொடக்கத்தில் 5 பவுண்டரிகளை விரட்டி சிறப்பாக தொடங்கினாலும் ஹர்திக் பாண்டியாவின் பந்தில் 23 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களும் பெரிதாக சோபிக்காததால் 241 ரன்கள் மட்டுமே சேர்த்தது பாகிஸ்தான் அணி.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்cricinfo

242 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி, இறுதிவரை நிலைத்து நின்று சதம் விளாசியதோடு இந்திய அணியை வெற்றிக்கும் அழைத்துச்சென்றார். ஃபார்ம் இல்லாமல் தவித்துவந்த கிங் கோலி, தன்னுடைய லெகசியை மீண்டும் நிரூபித்து 82வது சர்வதேச சதத்தை பதிவுசெய்தார். போட்டியின் ஆட்டநாயகனாகவும் விராட் கோலியே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விராட் கோலி
விராட் கோலி

இதன்மூலம் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 முறை ஆட்டநாயகன் விருதை வென்று சாதனை படைத்தார் விராட் கோலி. வேறு எந்த வீரரும் ஒரு அணிக்கு எதிராக 3 ஆட்டநாயகன் விருதுக்கு மேல் வென்றதில்லை.

இந்நிலையில் விராட் கோலியை புகழ்ந்து பேசியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹஃபீஸ்.

விராட் கோலி
சாம்பியன்ஸ் டிராபி| 51வது ODI சதமடித்தார் கிங் கோலி.. பாகிஸ்தானை வென்ற இந்தியா!

’கிங்’ என அழைக்க தகுதியானவர் கோலி..

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வென்றதற்கு பிறகு, சதமடித்து வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலியை முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹஃபீஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.

விராட் கோலி
விராட் கோலி

விராட் கோலியை புகழ்ந்து பேசியிருக்கும் அவர், ”விராட் கோலி அழுத்தம் நிறைந்த உயர்நிலை போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர். அவர் பெரிய ஐசிசி தொடர்களில், தனக்கான போட்டிக்காக காத்திருக்கிறார், சரியான நேரத்தில் அதை விலை உயர்ந்த ஒன்றாக மாற்றுகிறார். இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில் உங்களுக்கு ஹீரோவாக மாறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும், அதுபோலான வாய்ப்புகளில் சிறப்பாக பந்துவீசிய ஷோயப் மாலிக், அதிரடியாக பேட்டிங் செய்த ஷாஹித் அப்ரிடி போன்ற பாகிஸ்தான் வீரர்கள் நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.

அதுபோன்ற சந்தர்ப்பங்களுக்கு விராட் கோலி எப்போதுமே காத்திருக்கிறார். அவர் எப்போதும் பாசிட்டிவ் எண்ணத்தோடு களத்திற்கு வருகிறார். இந்தியாவிற்காக போட்டியை வெல்வேன் என களத்திற்கு வரும் அவர், நான் சிறப்பாக விளையாடுவது மட்டுமில்லாமல், என் தேசத்திற்காகவும் விளையாடுவேன் என வென்றுகொடுக்கிறார்.

விராட் கோலி
விராட் கோலி

உண்மையில், ஒருவர் ’கிங்’ என அழைக்கப்படுவதற்கு தகுதியானவர் என்றால் அது விராட் கோலி மட்டும் தான். பாபர் அசாம் இல்லை. உங்களை கிங்காக மாற்றுவதற்கு சிறப்பான ஆட்டமும், செயல்திறனும் காரணமாக இருக்கவேண்டுமே தவிர, PR வேலைகளால் நீங்கள் ஒருபோதும் ’கிங்’ ஆக முடியாது. விராட் கோலி உலகம் முழுவதும் சிறந்து விளங்கியுள்ளார், அவர் PR-ஐப் பயன்படுத்தி ’கிங்’ஆகவில்லை” என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

விராட் கோலி
அதிக சதங்கள், அதிகபட்ச ஸ்கோர், டோட்டல்.. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றின் 28 சாதனைகள்! முழு விவரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com