Mohammad Amir Makes About Pakistan Cricket Team
முகமது அமீர்எக்ஸ் தளம்

”பாக். அணியை யாரும் மதிப்பதில்லை” - முன்னாள் வீரர் ஆதங்கம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை மதிப்பதில்லை” என அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் விமர்சித்துள்ளார்.
Published on

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து அந்த அணி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டு அணியை, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து அந்த அணி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, லீக்கில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கும், சூப்பர் 8 சுற்றிலிருந்து வெளியேறியதற்கும் பாகிஸ்தான் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா 5 மில்லியன் ரூபாய் அபராதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், பாகிஸ்தான் அணியை அந்நாட்டுமுன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர், “தற்போது பாகிஸ்தான் அணியிடம் உண்மையான திறமை இல்லை. இப்போதைய வீரர்கள் திறமையானவர்கள் அல்ல. வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானை நடத்தும் விதத்தைப் பாருங்கள். ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து நம்முடன் விளையாட வரும்போது, அறிமுக வீரர்களையோ, பலவீனமான அணிகளையோ அனுப்பி வெல்கின்றன.

முகமது அமீர்
முகமது அமீர்எக்ஸ் தளம்

அதுவே, அவர்கள் நம்மை எவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. எந்தவொரு அணியும் பாகிஸ்தானில் உள்நாட்டுத் தொடரில் விளையாட வரும்போது, சிறந்த அணியை அனுப்புவதில்லை. நம்மை எவ்வளவு சாதாரணமாகக் கருதுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. பாகிஸ்தானை வலுவான அணியாகக் கருதினால், முழு பலம் கொண்ட அணியுடன் ஏன் வரவில்லை? நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் இந்தியாவுடன் விளையாட வரும்போது, முழு பலத்துடன் வருகின்றன. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக சாதாரணமாக 'ஏ' அணியை மட்டும் அனுப்புகிறார்கள். இதுவே அவர்கள் நம்மை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Mohammad Amir Makes About Pakistan Cricket Team
INDவிடம் தோல்வி.. சூப்பர் 8இல் வெளியேற்றம்.. பாக். வீரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com