virat kohli - maxwell
virat kohli - maxwellX

"என்னால் நடக்க முடியாமல் போகும்வரை IPL விளையாட விரும்புகிறேன்"- கோலி குறித்து மேக்ஸ்வெல் நெகிழ்ச்சி!

உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் க்ளென் மேக்ஸ்வெல், ஐபிஎல் தொடர் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்று பேசியுள்ளார்.
Published on

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் கால்வலியால் அவதிப்பட்ட க்ளென் மேக்ஸ்வெல், தன்னுடைய கால்கள் நடக்க முடியாமல் போகும்வரை ஐபிஎல் விளையாட விரும்புவதாக நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தன்னுடைய வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது என்பது குறித்து பேசியிருக்கும் அவர், வெஸ்ட் இண்டீஸில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக அதிகமான ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

உங்களால் கோலியுடன் தோளோடு தோள் சாய்த்து பேச முடியும்! - மேக்ஸ்வெல் நெகிழ்ச்சி

ஆஸ்திரேலியாவில் செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் மேக்ஸ்வேல், “ ஐபிஎல் தான் அநேகமாக நான் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும். என்னால் இனி நடக்கவே முடியாது என்ற நிலை வரும்வரை நான் ஐபிஎல் விளையாட விரும்புகிறேன். ஏனென்றால் எனது வாழ்க்கை முழுவதும் ஐபிஎல் எனக்கு அவ்வளவு நன்றாக இருந்துள்ளது. நான் சந்தித்த நபர்கள், நான் விளையாடிய பயிற்சியாளர்கள், தோளோடு தோய்த்து விளையாடும் சர்வதேச வீரர்கள் என ஒவ்வொரு ஐபிஎல் போட்டியும் என்னுடைய முழு வாழ்க்கைக்கும் அதிகளவு பயனுள்ளதாக இருந்திருக்கிறது” என்று நெகிழ்ச்சியோடு பேசினார்.

Glenn Maxwell
Glenn Maxwell Shailendra Bhojak

மேலும் கோலி குறித்து பேசுகையில், “நீங்கள் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோருடன் தோள்களைத் தோய்த்துக் கொண்டிருக்கிறீர்கள், மற்ற போட்டிகளைப் பார்த்துக் கொண்டே அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அந்த உணர்வை எப்படி சொல்வது. அது எந்த வீரரும் விரும்பக்கூடிய மிகப்பெரிய கற்றல் அனுபவம்” என்று கோலி குறித்து உணர்வுபூர்வமாக பேசியுள்ளார்.

Maxwell
Maxwell

தொடர்ந்து பேசிய அவர், “எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக நம்முடைய ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகளவில் ஐபிஎல்-க்கு வரவேண்டும் என நினைக்கிறேன். ஐபிஎல் அனுபவம் வெஸ்ட் இண்டீஸ் போன்ற நிலைமைகளில் கைக்கொடுக்கும் என்று நம்புகிறேன், அங்கு கொஞ்சம் உலர்ந்த ஆடுகளங்களில் பந்து சுழலும்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com