“ஒரு பவுலர் இருக்கிறார்... அவருக்கு வாய் மட்டும் தெற்கிலிருந்து வருகிறது”-ராபின்சனை கலாய்த்த ஹைடன்

இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சனை மறக்கக்கூடிய ஒரு கிரிக்கெட் வீரர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.
robinson- matthew hayden
robinson- matthew haydenTwitter

முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியான இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டி, ஆஷஸ் தொடர் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு போட்டியாக அமைந்தது. இங்கிலாந்து அணியின் பல்வேறு தாக்குதல் அணுகுமுறையையும் மீறி, ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லிங் வெற்றிபெற்றது. 8 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறிய போதிலும் டெய்ல் எண்டர்களாக (TailEnder) பேட்டிங் செய்த நாதன் லயன் மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் 9-வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் அடித்து வெற்றியை தேடித்தந்தனர்.

ஆஸ்திரேலிய வீரர்களை கலாய்த்து பேசிய ராபின்சன்!

முதல் இன்னிங்ஸின் போது சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவாஜா விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்து பவுலர் ஒல்லி ராபின்சன், கவாஜாவை ஆபாச வார்த்தைகளை கூறி வெளியேற்றினார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய டெய்ல் எண்டர் பேட்டர்கள் 4 பேரை வெறும் 14 ரன்களில் வெளியேற்றி இங்கிலாந்து விரைவாக சுருட்டியது.

Ollie Robinson
Ollie RobinsonTwitter

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்த ராபின்சன், “நான் பேசியதை நினைத்து மன்னிப்பு கேட்கப்போவதில்லை. இது ஆஷஸ் தொடர், இது போன்ற ஒரு தொடரில் முக்கியமான விக்கெட்டின் போது இப்படி செயல்படுவது இயல்பானது தான். ரிக்கி பாண்டிங் முதலிய ஆஸ்திரேலிய வீரர்கள் இதற்கு முன்னர் இதை எங்களுக்கு செய்துள்ளனர்” என்று கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் “ஆஸ்திரேலியா அணியின் டெய்ல் எண்டர்கள் 3 பேரும் 11ஆவது இடத்தில் ஆடும் வீரர்கள் போல் தான்.. அவர்களையெல்லாம் விரைவாகவே வெளியேற்றி விட முடியும்” என்றும் ஏளனமாக பேசியிருந்தார். டெய்ல் எண்டர் நாதன் லயன் தான் ஆஸ்திரேலியாவிற்கு வெற்றியை தேடித்தந்தார் என்பது குறிப்பிடத்ததக்கது.

“124 கிமீ வேகத்தில் வீசும் ஒரு பவுலருக்கு வாய் மட்டும் தெற்கிலிருந்து வருகிறது!”

முதல் ஆஷஸ் டெஸ்ட்டில் வெற்றிபெற்றதை அடுத்து, ராபின்சன் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கடுமையாக சாடியுள்ளார். முன்னாள் இங்கிலாந்து வீரர் இயன் ஹீலி உடனான உரையாடலில் பேசியிருக்கும் ஹைடன், “ஒரு பந்துவீச்சாளர் இருக்கிறார், அவர் கிரிக்கெட்டில் மறக்ககூடிய வீரராக மாறியுள்ளார். ஒன்றுமில்லாத 124 கிமீ வேகத்தில் வீசும் அவருக்கு வாய் மட்டும் தெற்கிலிருந்து வருகிறது” என்று சாடினார்.

இதைக்கேட்டதும், “நீங்கள் யாரைக் கூறுகிறீர்கள்? ஒல்லி ராபின்சனையா?” என்று ஹீலி கேட்க, “அவரை போன்ற ஒருவர் தான் என வைத்துக்கொள்ளுங்களேன். இருக்கட்டும் உங்கள் வழிக்கே நான் வருகிறேன்” எனக்கூறினார்.

“ஆஸ்திரேலிய அணி எந்தளவு சிறப்பாக விளையாடும் என்பதை விரைவில் கண்டுபிடிப்பார்கள்” - ரிக்கி பாண்டிங்

ராபின்சன் குறித்து பேசியிருக்கும் ரிக்கி பாண்டிங், “இந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி எப்போதும் போலான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவில்லை. இது ஆஷஸ் கிரிக்கெட் என்பதை இங்கிலாந்து விரைவில் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி எந்தளவு சிறப்பாக விளையாடும் என்பதை விரைவில் கண்டுபிடிப்பார்கள்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com