\
ind vs sl test
ind vs sl testBCCI/ AP Photo

மனவ் சுதர், ஜடேஜா 7 விக்கெட்டுகள்.. முதல் சதமடித்த 25 வயது சோனல்.. 284 ரன்னுக்கு இலங்கை AllOut!

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆல்அவுட்டானது இலங்கை அணி.
Published on
Summary

காலே டெஸ்டில் இந்தியா 462 ரன்கள் குவித்த நிலையில், இலங்கை 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 178 ரன்கள் பின்தங்கியது. மனவ் சுதர், ஜடேஜா இணைந்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை பேட்டிங்கை சிதறடித்தனர். அதே நேரத்தில் 25 வயது சோனல் தினுஷா, 4 பவுண்டரி, 2 சிக்சர் உதவியுடன் தனது முதல் டெஸ்ட் சதம் (101) பதிவு செய்து அணியை காப்பாற்றினார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இலங்கைக்கு எதிராக தன்னுடைய 600வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்து 462 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் அதிகபட்சமாக 167 ரன்கள் குவித்து அசத்தினார். இலங்கை பவுலர் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இலங்கை அணி, மனவ் சுதர் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 90 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய சோனல் மற்றும் டிக்வெல்லா ஜோடி 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தியது. இந்த ஜோடியை பிரிக்கமுடியாமல் இந்திய அணி போராடிய நிலையில், டிக்வெல்லாவை 80 ரன்னில் அவுட்டாக்கி பிரித்துவைத்தார் பிரசித் கிருஷ்ணா.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சோனல் தினுஷா 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உதவியுடன் தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தார். சோனலும் 101 ரன்னுக்கு அவுட்டாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 284 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் மனவ் சுதர் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

Sonal Dinusha
Sonal DinushaAP Photo

178 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கும் இந்திய அணி இன்னும் 2 நாட்கள் மீதமிருக்கும் நிலையில், வெற்றியை தன்வசப்படுத்தும் இலக்குடன் பயணிக்கிறது.

ind vs sl test
‘2011 போல.. 2027 உலகக்கோப்பை வாங்கித்தரன்..’ ஒரே போடாக போட்ட சீக்கா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com