SRH - LSG | 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றி!
2026 ஐபிஎல் தொடரானது மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 10 அணிகளும் ஒற்றைக் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், இன்றைய போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதரபாத் அணிகள் இடையே நடைபெற்றது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி டாஸ் வென்றது. தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்க் செய்தது. இந்த நிலையில், முதல் ஓவரிலேயே ஐதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, டிராவிஸ் ஹெட், கேப்டன் இஷான் கிஷன், லிவிங்ஸ்டன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால், 4 விக்கெட் இழப்புக்கு 26 ரன்களுடன் ஐதராபாத் தடுமாறியது. இந்த சூழலில் தான், கிளாசன் 41 பந்துகளில் 62 ரன்களும், நிதிஷ்குமார் ரெட்டி 33 பந்துகளில் 56 ரன்களும் எடுத்தன் காரணமாக ஐதராபாத் அணி ஓரளவுக்கு நல்ல நிலையை எட்டியது. இறுதியில், ஐதாரபாத் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பு 156 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து, 157 ரன்கள் இலக்குடன் லக்னோ அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் மார்க்ரம் 45 ரன்களும், மிட்செல் மார்ஷ் 14 ரன்களும் எடுத்தனர். மிட்சல் மார்சல் மலிங்கா பந்துவீச்சில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த பிறகு களத்துக்கு வந்த கேப்டன் ரிஷப் பந்த் 68 கடைசி வரை களத்தில் இருந்து லக்னோ அணியை வெற்றி பெற வைத்தார். அதன்படி, 157 ரன்கள் என்ற இலக்கை 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புடன் கடந்து லக்னோ அணி வெற்றி பெற்றுள்ளது.
தொடர்ந்து, இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டு வருகிறது.

