krunal pandya shares lungiboys video
krunal pandyaweb

லுங்கிபாய்ஸ் வீடியோவை பகிர்ந்த க்ருணால் பாண்டியா!

க்ருணால் பாண்டியாவின் பவுன்சர் பவுலிங் கிரிக்கெட்டில் பேசுபொருளாக இருந்துவரும் நிலையில், அதுகுறித்து லுங்கிபாய்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
Published on
Summary

ஐபிஎல்லில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் சூழலில், பந்துவீச்சாளர்கள் புதிய யுக்திகளை முயற்சித்து வருகிறார்கள். ஸ்பின் பவுலிங்கில் பவுன்சர் வீசும் க்ருணால் பாண்டியாவை மையமாக கொண்டு, லுங்கிபாய்ஸ் குழு நகைச்சுவை வீடியோ ஒன்றை உருவாக்கி இன்ஸ்டாவில் வெளியிட்டது. அந்த வீடியோவை க்ருணால் விரும்பி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடர், டி20 கிரிக்கெட் என முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக மாறிவரும் சூழலில், பந்துவீச்சாளர்கள் தங்களை அப்டேட் செய்துகொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த டி20 உலகக்கோப்பையில் கூட உஸ்மான் தாரிக் 2 செகண்ட் நின்றுவிட்டு பந்துவீசியது பேசுபொருளாக மாறிய நிலையில், பேட்ஸ்மேன்கள் ஸ்விட்ச் ஹிட் எல்லாம் அடிக்கும்போது வராத பிரச்னை பவுலர் புதிதாக ஒன்றை செய்யும்போது மட்டும் எப்படி பிரச்னையாக தெரிகிறது என பந்துவீச்சாளர்கள் பக்கமிருந்து கேள்விகள் எழுந்தன.

lungi boys ipl video
lungi boys ipl video

இந்தசூழலில் தான் தன்னுடைய ஸ்பின் பவுலிங்கில் பவுன்சர் வீசுவதை புதுப்பித்துள்ள க்ருணால் பாண்டியா, ஆர்சிபி அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக பவுன்சர்களை வீசிவருகிறார். இதை பேட்டி ஒன்றில் கூட என்னை விட நீங்கள் தான் அதிகம் பவுன்சர் வீசியிருக்கிறீர்கள் என க்ருணால் பாண்டியாவை புவனேஷ்வர் குமார் கலாய்த்திருந்தார்.

இந்நிலையில் தான் க்ருணால் பாண்டியாவின் பவுன்சர் வீசுவதை வைத்து இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுவரும் லுங்கி பாய்ஸ் புதிய வீடியோவை வெளியிட்டிருந்தனர்.

krunal pandya shares lungiboys video
0 விக்கெட்.. MI-ன் தொடர் தோல்விக்கு பும்ரா தான் காரணமா..? முன்னாள் வீரர் பதில்!

நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே லுங்கிபாய்ஸ் குழுவினர் ஐபிஎல் போட்டிகளை சார்ந்து சமூகவலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுவரும் நிலையில், தற்போது அவர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்று கிரிக்கெட்டர் க்ருணால் பாண்டியாவின் கவனத்திற்கு சென்றுள்ளது. அந்த வீடியோவை விரும்பிய அவர் அதை தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.

லுங்கிபாய்ஸ் வெளியிட்டிருந்த வீடியோவில், க்ருணால் பாண்டியா பந்துவீசுவது போலவும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனிடமிருந்து நீண்ட தூரம் தள்ளியிருந்து அந்த பந்தை பிடிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பின்னர் ஸ்லோமோசனில் பந்துவீசுவது போல க்ருணால் பாண்டியாவின் ஆக்சனுடன் அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோ வரவேற்பை பெற்றுள்ளது. இந்தவீடியோவை தான் க்ருணால் பாண்டியா பகிர்ந்துள்ளார்.

krunal pandya shares lungiboys video
தொடர்ந்து 4 தோல்வி.. பரிதாப நிலையில் கடப்பாரை அணி.. தோல்விக்கான 3 காரணங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com