சாஹிப்சாதா ஃபர்ஹான் துப்பாக்கி செலப்ரேஷன்
சாஹிப்சாதா ஃபர்ஹான் துப்பாக்கி செலப்ரேஷன்web

உங்க நாட்டுல வேறஎதுவும் சொல்லித்தரலயா..? PAK வீரரின் துப்பாக்கி செலப்ரேசன்! விளாசிய முன்னாள் கேப்டன்

இந்தியாவிற்கு எதிரான ஆசியக்கோப்பை போட்டியில் அரைசதமடித்த பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் துப்பாக்கியால் சுடுவது போல செலப்ரேஷன் செய்தது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Published on
Summary

இந்தியாவிற்கு எதிரான ஆசியக்கோப்பை போட்டியில் துப்பாக்கியால் சுடுவது போல செலப்ரேஷன் செய்த பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹானை முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக்கோப்பை போட்டியில் இரண்டு அணி வீரர்களும் ஆக்ரோஷத்துடன் விளையாடினர். அது களத்திற்கு உள்ளே மட்டுமில்லாமல், களத்திற்கு வெளியேயும் வெளிப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் மோதல்
இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் மோதல்web

போட்டியின் போது சுப்மன் கில், அபிஷேக் சர்மா, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் போன்ற வீரர்களிடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், அரைசதமடித்த பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் செய்த துப்பாக்கி செலப்ரேஷன், கோலி கோலி என ரசிகர்கள் கோஷமிட்டதற்கு ஹாரிஸ் ராஃப் காட்டிய சைகை என கிரிக்கெட் களம் போர்க்களமாக மாறியது..

இந்நிலையில் துப்பாக்கியால் சுடுவது போல செலப்ரேஷன் செய்த பாகிஸ்தான் வீரரை கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

சாஹிப்சாதா ஃபர்ஹான் துப்பாக்கி செலப்ரேஷன்
கிரிக்கெட் மைதானமா... போர்க்களமா? களத்தில் பாகிஸ்தான் வீரர்கள் செய்த சர்ச்சை செயல்கள்!

உங்களுக்கு வேற எதும் சொல்லி தரலயா..

நேற்றைய இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் சில நிகழ்வுகள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருந்தன. பாகிஸ்தான் வீரர் ஷாகிப்சாதா ஃபர்ஹான் அரை சதம் அடித்தவுடன் பேட்டை கையில் பிடித்துக்கொண்டு துப்பாக்கியால் சுடுவதுபோல காட்டினார்.

அதேபோல மற்றொரு பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் ஒரு விமானம் பறந்துகொண்டிருப்பது போலவும் திடீரென அது கீழே விழுவது போலவும் சைகை செய்து காட்டினார், மேலும் 6 என்ற எண்ணிக்கையும் அவர் கை விரல்களால் காட்டினார். இந்தியாவின் 6 விமானங்களை ஆபரேஷன் சிந்தூரின்போது வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறிவரும் நிலையில், அதை மறைமுகமாக கூறும் வகையில் ஹாரிஸ் ராஃப் செய்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயல்பாடுகள், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளது.

இந்நிலையில் தன்னுடைய யூடியூப் சேனலில் துப்பாக்கி செலப்ரேஷன் குறித்து பேசிய முன்னாள் இந்திய கேப்டன் சீக்கா, “சாஹிப்சாதா ஃபர்ஹான் ஒரு அரைசதம் அடிச்சிட்டு துப்பாக்கியால் சுடுவது போல செலப்ரேஷன் செய்தார், யோவ் இங்கயுமா வந்து ஷூட் பண்ணுவீங்க, எங்க ஷூட் பண்ணனும்னு உங்களுக்கு தெரியாதா? புத்தியிருக்கா இல்லையா. மிஷின் கன் மாதிரி ஷூட் பண்றீங்க, உங்களுக்கு வேற வேலையே தெரியாதா? உங்க ஊருல வேறஎதுவும் சொல்லிக் கொடுக்கலயா. கிரிக்கெட் ஆட வந்தீங்களா? ஷூட் பண்ண வந்தீங்களா” என விளாசினார்.

சாஹிப்சாதா ஃபர்ஹான் துப்பாக்கி செலப்ரேஷன்
’இனிமேல் பாகிஸ்தானை இந்தியா உடன் ஒப்பிடாதீர்கள்..’ அசிங்கப்படுத்திய கேப்டன் சூர்யகுமார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com