சுனில் கவாஸ்கர் - கேஎல் ராகுல்
சுனில் கவாஸ்கர் - கேஎல் ராகுல்web

10 ரன்னில் தவறிப்போன சாதனை.. சுனில் கவாஸ்கரின் AllTime Record-ஐ தவறவிட்ட கேஎல் ராகுல்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 500 ரன்களை கடந்திருக்கும் கேஎல் ராகுல், இங்கிலாந்து மண்ணில் சுனில் கவாஸ்கரின் ஆல்டைம் ரெக்கார்டை உடைப்பதற்கான வாய்ப்பை தவறவிட்டார்.
Published on

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணியில் அங்கமாக இருந்துவரும் கேஎல் ராகுல், பேட்டிங்கில் தன்னுடைய சிறந்த ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடக்க வீரராக களமிறங்கி 2 சதங்கள், 2 அரைசதங்கள், ஒரு 90 ரன்கள் என தரமான ஆட்டத்தை ஆடியிருக்கும ராகுல், 500 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.அ

கேஎல் ராகுல்
கேஎல் ராகுல்

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

சுனில் கவாஸ்கர் - கேஎல் ராகுல்
அமைதியின் எல்லையை கடந்த ஜோ ரூட் – ஓவல் டெஸ்டில் வெடித்த வார்த்தை யுத்தம்! களத்தில் நடந்தது என்ன?

சுனில் கவாஸ்கர் சாதனையை உடைக்கவிருக்கும் ராகுல்..

நடப்பு டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக 10 இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் கேஎல் ராகுல், 53 சராசரியுடன் 532 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இவருடைய அதிகபட்ச ஸ்கோர் 137.

இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் 500 ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையை படைத்திருக்கும் கேஎல் ராகுல், அதிகபட்ச ரன்கள் குவித்த முதல் வீரராக மாறும் சாதனையை 10 ரன்னில தவறவிட்டார்.

சுனில் கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர்

1979-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் 542 ரன்கள் குவித்த சுனில் கவாஸ்கர், இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய தொடக்க வீரராக முதலிடத்தில் நீடிக்கிறார். அவருடைய சாதனையை முறியடிக்க இன்னும் 10 ரன்களே மீதமிருந்த நிலையில் 5வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 7 ரன்னில் வெளியேற ராகுல் நல்ல வாய்ப்பை தவறவிட்டார்.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 75/2 என்ற நிலையில் பேட்டிங் செய்துவருகிறது.

சுனில் கவாஸ்கர் - கேஎல் ராகுல்
Two-Tier System | 2 குரூப்களாக டெஸ்ட் அணிகள்.. புதிய சிஸ்டத்தை எதிர்க்கும் பாகிஸ்தான்! காரணம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com