விராட் கோலியின் 50 ODI சதங்கள் சாதனையை பாபர் அசாம் உடைப்பார்! - முன்னாள் பாக். வீரர் நம்பிக்கை

விராட் கோலியின் 50 ODI சதங்கள் என்ற இமாலய சாதனையை 2 வீரர்களால் முறியடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஒருவர்.
கோலி - பாபர்
கோலி - பாபர்web

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்திருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கடந்த புதன் கிழமையன்று விராட் கோலி முறியடித்தார். 49 ODI சதங்கள் அடித்து அதிக ஒருநாள் சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்திருந்த சச்சின் டெண்டுல்கரின் இமாலய சாதனையை, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 50-வது சதமடித்தன் மூலம் உடைத்து புதிய வரலாறு எழுதியுள்ளார் விராட் கோலி.

கோலியின் இந்த வரலாற்று சாதனைக்குபிறகு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தின் தலைசிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கரா? அல்லது விராட் கோலியா? என பெரிய பஞ்சாயத்தே நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் அந்த பஞ்சாயத்த விடுங்க, கோலியோட 50 ODI சதங்கள் என்ற சாதனையை எல்லாம் எங்க ஆளு ஒருத்தர் சீக்கிரம் முறியடித்துவிடுவார் என்று கூறியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர்ன் கம்ரான் அக்மல்.

2 வீரர்களால் கோலியின் 50 ODI சதங்கள் சாதனையை முறியடிக்க முடியும்!

ஏஆர்ஒய் செய்தி சேனலின் கிரிக்கெட் விவாதத்தின்போது பேசியிருக்கும் கம்ரான் அக்மல், “டாப் 3 பேட்டிங் வரிசையில் விளையாடும் வீரர்களால் மட்டுமே விராட் கோலியின் 50 ஒருநாள் சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க முடியும். மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்களால் அதை முறியடிக்க முடியாது. அப்படி கோலியின் 50 சதங்களை முறியடிக்கும் வீரராக பாபர் அசாம் நம்மிடம் இருக்கிறார். அதேபோல அவர்களிடமும் ஒரு வீரர் இருக்கிறார், அது சுப்மன் கில்” என்று தெரிவித்துள்ளார் கம்ரான் அக்மல்.

சுப்மன் கில் எல்லாம் சரி தான், ஆனால் பாபர் அசாமால் எல்லாம் முடியாது” என்றும், ”நேபாளோடு மட்டும் விளையாடினால் வேண்டுமானால் பாபர் அசாமால் 50 சதங்கள் அடிக்க முடியும்” என்றும், ”இந்த வருடத்தின் சிறந்த காமெடி இது” என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com